இந்தியாகல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

சைலன்ட்கிள்ளர் அஜினோமோட்டோ உடல் நலத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துக்கள்

advertisement by google

அஜினோமோட்டோ உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படுத்தும் ஆபத்துக்கள்!!

advertisement by google

அஜினோமோட்டோ அல்லது எம்.எஸ்.ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளூடாமேட் நாம் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளில் எல்லாம் கலந்திருக்கும் முக்கியமான கலவையாகும். முன்னதாக இந்த அஜினமோட்டோவை சைனீஸ் உணவுகளில் மட்டுமே கலக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய நாட்களில் அஜினமோட்டோ கலக்காத உணவுகளே இல்லை என்ற நிலை வந்து விட்டது.

advertisement by google

அஜினோ மோட்டோவினால் ஏற்படக் கூடிய சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக தலைவலி உள்ளது. இதனுடைய சக்தியானது அடிக்கடி தலைவலியை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்த நிலையை எப்போதும் அனுபவிக்கச் செய்து விடுகிறது.

advertisement by google

அஜினோமோட்டோவினால் மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும்.

advertisement by google

அஜினோமோட்டோவை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மரத்துப் போதல், கூச்சம் அல்லது எரிச்சல் போன்ற உணர்வுகள் வருவதற்கு அஜினமோட்டோ காரணமாக இருக்கும்.

advertisement by google

அஜினோமோட்டோவை சாப்பிடுவதன் மூலம் இதயத்தில் படபடப்பு ஏற்படவும், இதயப் பகுதியில் வலி ஏற்படவும் மற்றும் இதயம் அடைத்துக் கொள்ளவும் கூடும்.

advertisement by google

அஜினோமோட்டோவினால் உடற்பருமன், ஆஸ்துமா, ஹார்மோன் சமநிலையற்ற நிலை, மன இறுக்கம், உயர் இரத்த அழுத்தம், அடிவயிற்றில் பிரச்சனைகள், தைராய்டு செயல்பாட்டில் குறைபாடுகள், டைப்-2 நீரிழிவு நோய், சாப்பாடு அலர்ஜியாதல் மற்றும் கண்களின் விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

advertisement by google

அஜினோமோட்டோ ஆரம்பத்தில் ஒரு வகை கடல் பாசியில் இருந்து தயாரிக்கப்பட்டது. தற்போது கோதுமை, பீட்ரூட், கரும்பு என்று பலவித உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

advertisement by google

Related Articles

Back to top button