இன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

ராஜபாளையம் அய்யனார்கோவில் மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் நிவாரணபொருட்கள் மற்றும் ரூ 1000 உதவித்தொகை வழங்கினார்? முழுவிபரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

இராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் வசிக்கும் மழை வாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் அவர்கள் அத்தியாவசிய பொருள் மற்றும் ரூ.1000 உதவி தொகை வழங்கினார்.

advertisement by google

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ராம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் அவர்கள் வழங்கினார். மேலும் மழை வாழ் மக்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை ரூ.1000 வழங்கினார்.

advertisement by google

பின் செய்தியாளர் சந்திப்பின் போது,

advertisement by google

இராஜபாளையத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குணமடைந்தவர்கள் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் 28 நாட்கள் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக சீல் வைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்தார். மேலும் மக்கள் அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார், விருதுநகர் மாவட்டம் விரைவில் தொற்றிலிருந்து முன்னேற்றம் அடைந்து பச்சை குறியீடினை பெறும். மாவட்டத்தில் சமூக பரவல் தற்போது வரை இல்லை.

advertisement by google

மேலும் 144 தடை உள்ள நிலையில் பொது வெளியில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் மக்களுக்கு உதவிகள் செய்வது குறித்து நீதிமன்றங்களின் ஆலோசனை படி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தல் மற்றும் 48 மணி நேரத்திற்க்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

advertisement by google

மேலும் கடந்த 24 ம் தேதி இராஜபாளையத்தில் அனுமதி இன்றி பிறந்த நாள் முன்னிட்டு அதிகமான மக்களை திரட்டிய தொழில் அதிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button