கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறு

வரலாற்றுச் சின்னமாகவுள்ள திருச்சி ராணிமங்ம்மா கொழுமண்டபம்

advertisement by google

வரலாற்று சின்னமாக உள்ள ராணி மங்கம்மாள் கொலு மண்டபம்

advertisement by google

நவ 11-திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தினர் வரலாற்று சின்னமாக திகழும் ராணி மங்கம்மாள் கொலு மண்டபத்தில் பார்வையிட்டு அதன் வரலாற்றினை தெரிந்து கொண்டனர்.
1659 இல் மதுரை நாயக்க மன்னராக சொக்கநாத நாயக்கர் பொறுப்பேற்ற
காலத்தில் பல்வேறு சிக்கல்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. திருச்சிராப்பள்ளி கோட்டையை கைப்பற்ற எண்ணி படையெடுத்து வந்த முகமதியர்களால் பீஜப்பூர் சுல்தான் படைகளையும் எதிர்த்து போராட வேண்டி இருந்த காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் வறட்சியும் கடும் பஞ்சம் நிலவியது எதிரிகளுடன் போராடும் அதே நேரத்தில் மக்களை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்த சொக்கநாத நாயக்கர் மக்களுக்கு உடனடியாக சென்று சேர்கிறதா என்பதை அருகிலிருந்து கண்காணிக்க விரும்பினார். வடக்கிலிருந்து வரும் எதிரிகளை சமாளிக்கவும் பஞ்சத்தில் வாடும் மக்கள் துயர் துடைக்கவும் மதுரையில் இயங்கிவந்த தலைநகரை 1665 இல் அவர் திருச்சிக்கு மாற்றினார். திருச்சியில் தலைநகரம் இயங்குவதற்கு ஏற்றவாறு அரண்மனையும் கொலு மண்டபத்தையும் சொக்கநாத நாயக்கர் திருச்சியில் கட்டினார். இந்த அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு பெரும் நிதி தேவை பட்டது. ஏற்கனவே போராட்டங்களால் பொருளாதார நிலையில் நலிவுற்றிருந்த அரசு கட்டட செலவுக்காக பொதுமக்களிடம் புதிய வரியை சுமக்கும் நிலை ஏற்பட்டது பஞ்சத்தில் வாடும் மக்களை வறுமையால் துன்புறுத்த விரும்பாத சொக்கநாதர் மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகாலில் இருந்து பல கட்டட தளவாடங்களையும் அணிகலன்களையும் உடைத்து பெயர்த்து எடுத்துக்கொண்டு திருச்சியில் கட்டடங்களை அமைத்து அதன் பின்பு வந்த காலத்தில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்த போதிலும் பழமையான கட்டடக் கலை அமைப்பு முறைகளுடன் திகழும் இக்கட்டிடத்தை பொது மக்கள் கண்டு களிக்கும் அருங்காட்சிய துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சங்ககாலச் சோழர் முதல் பல்வேறு அரச மரபுகள் திருச்சிராப்பள்ளியில் அரண்மனையில் கொலு மண்டபம் அமைத்து ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறினாலும் அரண்மனை பகுதியாக இன்றளவிலும் எஞ்சி நிற்கும் வரலாற்று சின்னமாக இருப்பது ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் மட்டுமே. இக்கட்டிடத்தில் கூடுதல் சிறப்பாக சிலைகளையும், கலை, வரலாறு, அறிவியல் பொருட்களையும் அமைத்து சிறந்ததொரு காட்சிக் கூடமாக அரசு அருங்காட்சியகம் பேணி பாதுகாத்து வருகிறது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், சந்திரசேகரன், முகமது சுபேர், கமலகண்ணன், சாமிநாதன், இளங்கோவன், முகமது இஸ்மாயில், யோகேஷ், ரெங்கராஜன், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பலர் வரலாற்று சின்னமாக உள்ளார் ராணி மங்கம்மாள் கொலு மண்டபத்தினை கண்டுகளித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button