இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறு

முத்துராமலிங்கதேவர்தேசிய தெய்வீகத்தலைவர்

advertisement by google

தேவா் ஜயா…தேசிய தெய்வீகத் தலைவா்…!!

advertisement by google

தேசிய தலைவா் “தேவா் ஜயாவை”பற்றித் தொிந்து கொள்ளுங்கள்.

advertisement by google

தேவா் ஜயாவை “ஜாதித் தலைவா்” என்று நினைத்துக் கொண்டிருப்பவா்கள் இந்தச் சிறு குறிப்பு மூலம் அவா் ஒரு “தேசிய தெய்வீக தலைவா்” என்று அறியலாம்..

advertisement by google

வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல.சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு…

advertisement by google

அதிசய ஆன்மிக அரசியல்வாதி…

advertisement by google

34 கிராமங்களுக்குச் சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

advertisement by google

நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார்.இருவரும் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட உண்மையான போராளிகள்.

advertisement by google

நேதாஜி தனது அம்மாவிடம் “உங்களுடைய கடைசி மகன் இவன்” என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்.

“அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்” என்றார் நேதாஜி.

தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.

நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கி்ரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழக தலைவராக இருந்தார் தேவர்.

அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய “இந்திய தேசிய ராணுவத்தில்” இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றைச் சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.

நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.

மூன்று முறை MP யாகவும், மூன்று முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரச்சாரம் என்று தன் தொகுதி பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

எனக்கு,என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை… நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.

பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.

அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.

இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டை விட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும்,வென்றார்… பதவியேற்காமலே மறைந்தார்.

காமராஜர் சாதாரண இளைஞராக இருந்த போது, அவருக்குச் சொத்தாக இரு ஆடுகள் வாங்கி, வரி கட்டி, வாக்குரிமை வாங்கி, தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றிபெற வைத்தார்.

அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.

இரயிலில் இலவசமாகப் போக மாட்டார்.

சம்பளம் எதுவும் வாங்க மாட்டார்.

அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்க மாட்டார்.

கையைத் தலைக்கு வைத்துத் திண்ணையில் தூங்குவார்.

வாழ்வில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்.

இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள்,தாடி வளர்த்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.

ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார்.தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணைச் சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.

சொத்துக்கள் பெரும் பகுதியை “தலித் சகோதரா்களுக்கு
“எழுதிக் கொடுத்தவர்

“சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்” என்றார்.

“தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்தப் பாவியாவான்” என்றார்

ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர்.டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையைக் கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப் போனது மன்றம். திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்… தூக்கி வைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.

ஜோதிடம்,சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் என அனைத்து வகைக் கலைகளையும் அறிந்தவர்.

நேதாஜி இறந்து விட்டார் என காங்கிரசும், ஆங்கிலேயர்களும் கட்டிய கதையைத் தகர்த்தெறிந்தவர். இறுதிவரை நேதாஜி தேவருடன் மட்டுமே ரகசியத் தொடர்பில் இருந்தார்.

ஆன்மிகத்தின் அடையாளம்.

தன் வாழ்நாள் முழுதும் பெண் வாடையே படாதவர்.

“உங்கள் அழகு மீசை பிடித்துள்ளது” ஒரு பெண் கூறியதால் , ஆண்மையின் அடையாளமான தன் மீசையை நீக்கி விட்டு இறுதிவரை வாழ்ந்தவர்.

தான் படுத்தப் படுக்கையாக இருக்கும் போதும் தனக்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் செவிலியரை ஒரு பெண் தன் உடலைத் தொடக் கூடாது என்று மறுத்தவர்.

இறுதிக் காலத்தில் “ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தாங்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழலாம்” என்று மருத்துவர்கள் கூற, “இறைவன் கொடுத்த உடலை குறையின்றி மீண்டும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறி,அறுவை சிகிச்சையை மறுத்து, உயிரை மாய்த்துக் கொண்டவர்.

பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப் போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியவர்.

இந்து மதத்தின் தத்துவங்களை இவரளவுக்கு யாரும் அறிந்திருக்க முடியாது.

ஒரு கூட்டத்தில் முஸ்லீம் மத போதகர்களே ஆச்சர்யப்பட்டு “எங்களது மதத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதவற்றையும் தேவர் தெரிந்து வைத்திருக்கிறார்” என்றனர்.அந்த அளவு முஸ்லீம்,புத்த, கிறிஸ்தவ மதக் கருத்துக்களிலும் தெளிந்திருந்தார்.

அவர் இறந்ததும் அவர் வளர்த்த மயில்கள் தன் உயிரை மாய்த்தது. மன்னவன் வரலாறு மண்ணில் எழதின மயில்கள்.

சித்த வித்தையில் உயர்ந்தும் நைஷ்டீக பிரம்மச்சரியத்தின் உச்சத்தைத் தொட்டும் ஈடிணையற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் தேவர். அதனாலே சித்தவித்தையில் உள்ளவர்களுக்கும் நைஷ்டீக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கும் அவரது சீடர்களால் நடத்தப்படும் “குருபூஜை” என்ற சிறப்பு பூஜையானது தேவருக்கு வருடந்தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. பால்குடம் எடுத்தல், முளைப்பாரி வளர்த்தல், முடிக்காணிக்கை செலுத்துதல் முதலிய செயல்களின் மூலம் மக்கள் தேவரை தெய்வமாக வணங்குகின்றனர்.

நேருவை தவிர்த்த தேவர்.

நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனபோது உலக முக்கியஸ்தர்கள் பலர் ஆசிய ஜோதி எனப் போற்றி அவரை சந்திக்க நினைத்தனர். ஆனால் நேருவோ, “நான் ஃபார்வர்டு ப்ளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்திக்க விரும்புகிறேன்” எனக்கூறி சந்தித்து கைகுலுக்க கை நீட்டினார்.”என் தலைவனை (நேதாஜி) காட்டிக் கொடுத்த கையை நான் தொடமாட்டேன்” எனக்கூறி நிராகரித்து விட்டார்.

ராஜாஜி போற்றிய தேவர்.

ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. அக்காலத்தில் பிரபலமான மூன்று பிரம்மச்சாரிகளின் பெயர்களைக் கூறி, இவர்களுடைய பிரம்மச்சரியத்திலே எது உயர்ந்தது எனக்கேட்டது அக்கேள்வி.அந்த மூன்று பேரில் முதலாமவர் இராமகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவரும், தமிழகத்தின் முதல் கல்வி அமைச்சருமான, காந்தியவாதி திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள். இரண்டாமவர் பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்கள். மூன்றாமவா் திரு.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்.

கண்ணதாசன் வியந்த தேவர்.

புகை,மது,மாது, மாமிசம் என சகல கெட்ட சுவாசம் கொண்ட நான் சொல்கிறேன்.இந்த உலகில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி உண்டென்றால் அது உத்தம சீலர் பசும்பொன் தேவர் அவர்கள்
மட்டுமே” என்றார் காவிய கவிஞர் திருமிகு.கண்ணதாசன் “இந்து மதத்தின் பொக்கிஷம்” எனப்படும் தனது “அர்த்தமுள்ள இந்துமதம்” நூலில்.

வரலாற்று ஆய்வாளர் திரு.மருதுபாண்டியன் “நான் ஆராய்ச்சி செய்யாத தலைவர்களே இல்லை…நான் ஆராய்ந்தவர்களிலேயே மிகப்பெரும், மிகச்சிறந்த தலைவர் தேவர் தான் என்கிறார்.

இவையனைத்தும் நான் அறிந்தவற்றில் சிறு அளவே தேசியமும், தெய்வீகமும் தனது இருகண்கள் என்று வாழ்ந்த தேவா் ஜயா சாதி தலைவா் அல்ல…சாதித்த தலைவா்.

தேசிய தலைவா் தேவா் ஜயா புகழ் ஓங்குக…

advertisement by google

Related Articles

Back to top button