இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஏன் முஸ்லீம் அகதிகள் மட்டும் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கபடவில்லை அமித்ஷா விளக்கம்?

advertisement by google

ஏன் முஸ்லீம் அகதிகள் மட்டும் குடியுரிமை சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.. லோக்சபாவில் அமித்ஷா விளக்கம்.

advertisement by google

டெல்லி: குடியுரிமை (திருத்த) மசோதா ஏன் இந்து, சீக்கிய, புத்த சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை மட்டுமே பாதுகாக்க வழங்கியது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக கூறி அமித்ஷா, ஆனால் அண்டை நாடுகளான மூன்று நாடுகளும் முஸ்லீம் நாடுகள் என்பதால், துன்புறுத்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது அவர்களுக்கு மசோதாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றார்.

advertisement by google

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் திங்கள்கிழமையான நேற்று சர்ச்சைகள் நிறைந்த குடியுரிமை திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீது சுமார் 12 மணி நேரம் கடுமையான விவாதம் நடந்தது. அதன்பிறகு குடியுரிமை திருத்த மசோதா நள்ளிரவு 12 மணி அளவில் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 311 எம்பிக்களும், எதிராக 80 எம்பிக்களும் வாக்களித்தனர்.
எதிர்க்கட்சி இந்த மசோதா இந்தியாவின் மதசார்பின்மையை சிதைப்பதாக கூறி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினர். மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் பாகுபாடு காட்டுவதாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள்.

advertisement by google

தொடர்பு இல்லை
இதற்கு பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த மசோதாவுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் இருநது துன்புறுத்தப்பட்டு அங்கிருந்த வந்த சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க மட்டுமே இந்த மசோதா விரும்புகிறது” என்று அமித் ஷா உறுதியளித்தார்.

advertisement by google

மோடி அரசு உள்ளது
இந்தியாவில் சிறுபான்மையினரிடையே இந்த மசோதா குறித்து அச்சம் இல்லை என்று கூறிய அமித்ஷா, எதிர்க்கட்சியின் அறிக்கைகளுக்குப் பிறகு சில அச்சங்கள் எழுந்திருந்தாலும், நரேந்திர மோடி அரசின் கீழ், சிறுபான்மையினர் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒவ்வொரு இந்தியருக்கும் நான் உறுதியளிக்கிறேன். என்றார்

advertisement by google

சட்டவிரோதம் அல்ல
குடியுரிமை (திருத்த) மசோதா சட்டவிரோதமானது அல்ல என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்றும் கூறி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்டை இஸ்லாமிய நாடுகளில் துன்புறுத்தல்களில் இருந்து தப்பித்து வந்த சிறுபான்மையினரைப் பாதுகாக்கவே இந்த சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்றார்.

advertisement by google

தேவையில்லை
அகதிகள் புகலிடம் குறித்த ஐ.நா. சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறிய அமித்ஷா, இந்தியாவுக்கு அகதிக் கொள்கை தேவையில்லை என்றும் அகதிகளின் பாதுகாப்பிற்கு எங்களிடம் போதுமான சட்டங்கள் உள்ளன” என்றும் அமித் ஷா கூறினார்.

advertisement by google

நாட்டை பிரித்தது
நாட்டை காங்கிரஸ் கட்சி மதரீதியாக பிரிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி பிரிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்திருக்க வேண்டிய அவசியமே எழுந்திருக்காது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

ஒப்பந்தம் போடப்பட்டது
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் சிறுபான்மையினரை கவனித்துக்கொள்வதாக ஜவஹர்லால் நேருவுக்கும் லியாக்கத் அலிக்கும் இடையிலான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

இந்தியாவில் உயர்வு
“1951 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் 23 சதவீதமாக இருந்தனர், அது மிகக் குறைவாகிவிட்டது. வங்காள தேசத்தில் இது 22 சதவீதமாக இருந்தது, 2011 ல் இது 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை 1951 ல் 9.8 சதவீதத்திலிருந்து 14.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் லோக்சபாவில் அமித்ஷா பதில் அளித்தார்.

துன்பப்பட்டவர்கள்
“துன்பப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்த கதையை சிறப்பாக சொல்வார்கள். அவர்கள் தங்கள் மகள்களுக்கு பாதுகாப்பு கோரி இங்கு வந்தவர்களுக்கு தங்குவதற்கு இடம் தர முடியாது என்று நாங்கள் கூற முடியாது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

அமித்ஷா மறுப்பு
குடியுரிமை மசோதா இந்துத்துவா சிந்தனையில் மொழியப்பட்டுள்ளதாக கூறப்படும் கூற்றை நிராகரித்த அமித் ஷா, இந்துக்களின் மக்கள் தொகை 1991 ல் 81 சதவீதத்திலிருந்து இப்போது 79 சதவீதமாக குறைந்துவிட்டது என்று கூறினார்.

advertisement by google

Related Articles

Back to top button