இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் உலக நன்மை வேண்டி வேள்விபூஜை சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர்ராஜு?

advertisement by google

திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

advertisement by google

கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற சித்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பங்கேற்று அங்கு நடைபெற்ற உலக நன்மை வேண்டி வேள்வி பூஜையிலும் கலந்து கொண்டனர்.

advertisement by google

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டுகளை முறையாக மறுவரையறை செய்து வெளிப்படையாக அறிவித்துள்ளது. நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டு, தேர்தலுக்கு தடை இல்லை என்று சொன்ன பின்பு தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.இதன் பின்பும் திமுக குறைகூறுவது அவர்கள் மக்களை சந்திக்க பயப்படுகின்றனர் என்பதை காட்டுகிறது. விக்ரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெற்ற தோல்வி மூலமாக அவர்களுக்கு இன்றும் ஜுரம் தணிந்தபடி இல்லை.திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.ஆகையால் மக்கள் மன்றத்தை சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் எவ்வித குளறுபடியும் இல்லை

advertisement by google

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், ஏலத்தில் மூலம் பதவி விடப்பட்டால் அது செல்லாது. அதற்கு துணை போகக்கூடாது என தேர்தல் ஆணையமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. அது மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ,ஜனநாயக முறையை மீறி உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என் நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை,கூட்டணியில் உள்ள தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவதற்குள் இறுதி வடிவம் பெற்று, அதே கூட்டணியோடு நாங்கள் போட்டியிடுகின்ற நிலையை மக்கள் பார்ப்பார்கள். பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு தமிழகத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. தெலுங்கானாவில் ஒரு பாலியல் சம்பவத்தில் என்கவுண்டர் நடந்ததால் அது பெரிதாக்கப்பட்டுள்ளது, தொடர் மழையினால் எவ்வித பாதிப்புகளும் இல்லை, குடிமராத்து பணிகள் காரணமாக நீர்நிலைகள் சேதமடையவில்லை, தொடர் மழையின் காரணமாக விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது, அதனடிப்படையில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button