t

33வயசுதான்400பேருக்கு நாமம் போட்டு 100கோடி மோசடி செய்த சேலம் இந்துமதி

advertisement by google

விண்மீன் விரைவு செய்திகள்.
33 வயசுதான்.. 400 பேருக்கு நாமம் போட்டு.. ரூ.100 கோடி மோசடி.. அதிர வைத்த சேலம் இந்துமதி!

advertisement by google

சேலம்: இந்துமதிக்கு 33 வயதுதான ஆகிறது.. ஆனால், 400 பேரை ஏமாற்றி 100 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டார்.. இதற்கு அவரது கணவனும் உடந்தை.. ஜோடியாக போலீசில் சிக்கி கொண்ட இவர்கள் இப்போது கம்பி எண்ணி வருகிறார்கள்.

advertisement by google

சேலம் புது பஸ் ஸ்டேண்ட் எதிரே ஒரு அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு வசித்து வந்த தம்பதிதான் மணிவண்ணன் – இந்துமதி. மணிவண்ணன் ஊறுகாய், மசாலா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.
பின்னர், இவர்கள் திடீரென ஆர்எம்வி குரூப் ஆஃப் கம்பனீஸ் என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்தனர். அதாவது தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தார், 100 நாட்களில் டவுள் ஆக்கி தருகிறோம் என்றனர். அதிலும் நீண்ட நாள் முதலீடு என்றால், 25 சதவீத வட்டியும் தருவோம் என்று அறிவித்தனர்.
சாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்?

advertisement by google

கவர்ச்சி விளம்பரங்கள்
அது மட்டுமல்ல.. யார் நிறைய முதலீடு செய்கிறார்களோ, அவர்களுக்கு இலவசமாக ஃபாரீன் டிரிப் அழைத்து செல்லப்பட்டு, காஸ்ட்லி கார் ஒன்றும் தரப்படும் என்று அறிவித்தனர். இந்த கலர் கலர் விளம்பரங்களை கண்டு, ஏராளமானோர் இந்த தம்பதியிடம் பணத்தை கொட்ட ஆரம்பித்தனர்.

advertisement by google

ஸ்டார் ஹோட்டல்
இவர்களை நம்ப வைக்க இந்த தம்பதி வாடிக்கையாளர்களுடன் மீட்டிங் நடத்துவாராம்.. அதையும் ஸ்டார் ஓட்டலில்தான் நடத்துவாராம். இந்துமதியின் குடும்பமும் இந்த அட்டூழியத்தில் இறங்கி வேலை பார்த்துள்ளது. பாடுபட்ட உழைத்த மக்கள் முதல் பேராசை கொண்ட மக்கள் வரை கோடி, கோடியாக முதலீடு செய்தனர்.

advertisement by google

இந்துமதி
இப்படி வாங்கிய பணத்தை தனது டேபிள் முழுவதும் வரிசையாக அடுக்கி வைத்து போட்டோ எடுத்துக் கொள்வாராம் இந்துமதி. ஏனென்றால், இந்த போட்டோக்களை மற்ற தொழிலதிபர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களையும் முதலீடு செய்ய வைக்க தூண்டில் போடுவாராம். இந்த போட்டோவையும் பார்த்தும் பலர் பணத்தை கொட்டி உள்ளனர். பணம் எப்படியும் 100 கோடியை தாண்டிவிட்டது.. 2018-ல் இந்த ஜோடி மிஸ்ஸிங்!
பணத்தைஇழந்தவர்கள், போலீசுக்கு போனார்கள்.. கோர்ட்டுக்கு போனார்கள்.. ஆனால், இந்த தம்பதி முன்ஜாமீன் வாங்கி கொண்டு தப்பித்து வந்தது.

advertisement by google

புகார்
ஆனால், வயித்தெறிச்சலில் கண்ணீர் விட்ட மக்கள் இதனை விட்டுவிடவில்லை.. தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இந்த தம்பதி மீது புகார் தந்து கொண்டே இருக்கவும், சேலம் கமிஷனர் இந்த விஷயத்தில் இறங்கினார். இவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடியும் கிடைக்கவில்லை.

advertisement by google

சொகுசு கார்கள்
அப்போதுதான் இந்த ஜோடி துபாயை சுற்றி பார்க்க போயிருந்தது தெரியவந்தது. 2 நாளைக்கு முன்னாடி தான் சேலம் வந்து இறங்கியதும், கைது செய்யப்பட்டனர். 2 லேப்டாப், 2 டேப், 13 செல்போன்கள், 2 சொகுசுக் கார்கள், 10 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் இவைகள் இப்போதைக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.

advertisement by google

Related Articles

Back to top button