t

கயத்தாரில் மீன் வியாபாரி அடித்துக் கொலை – 2 பேர் கைது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கயத்தாரில் மீன் வியாபாரி அடித்துக் கொலை – 2 பேர் கைது

advertisement by google

கயத்தார் ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோனி அப்பன் என்பவரது மகன் சந்தானம்(46). இவர் கயத்தார் காவலர் குடியிருப்பு அருகே மீன் வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு அந்தோணி ஆரோக்கிய செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று தளர்வு இல்லாத ஊரடங்கு என்பதால் சந்தானம் காலையில் வீட்டில் இருந்துள்ளார். நேற்று இரவு ஒன்பது மணிக்கு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். வீட்டிலிருந்து கிளம்பியவர் கயத்தார் கடம்பூர் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தர்களிடம் மது வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற சந்தானம் நூறு ரூபாய் கொடுத்து மது பாட்டில் கேட்டுள்ளார். நூறு ரூபாய்க்கு மது பாட்டில் கிடையாது என்றும், கூடுதலாக தொகை கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தானம், நீங்கள் சட்டவிரோதமாக , திருட்டுத்தனமாக மது விற்பதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த சிலர் சந்தானத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தானம் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சந்தானத்தை மீட்டு பைக்கில் அழைத்து சென்று வீட்டின் அருகே விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் சந்தானம் வீட்டுக்கு செல்லாமல், அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் அந்தோணி ராஜ் என்பவர் வீட்டில் தண்ணீர் வாங்கி கொடுத்துவிட்டு அங்கு உள்ள திண்ணையில் படுத்து வழங்கியுள்ளார். பின்னர் இன்று காலையில் வீட்டுக்கு சென்றபோது அவரது உடலில் காயங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, என்னவென்று விசாரிப்பதற்கு முன்பே சந்தானம் மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் கயத்தார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தானத்தை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் ‌. இதையடுத்து சந்தானத்தை தாக்கி கொலை செய்தவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கும் என்று கூறி அவரது உறவினர்கள் கயத்தார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் கோவில்பட்டி டிஎஸ்பி கலைகதிரவன் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் உடற்கூறு ஆய்வுக்காக சந்தானம் உடல் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செல்லப்பட்டது. இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக அகிலாண்டபுரத்தை சேர்ந்த காளிமுத்து, தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுடலை கண்ணு ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். சட்டவிரோத மது விற்பனையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மீன் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கயத்தார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button