இந்தியா

பாரதீயஜனதா பெற்ற 90 சதவீத நன்கொடைகள் அம்பலமாகப் போகிறது: ப. சிதம்பரம்

advertisement by google

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், நன்கொடை பெற்ற விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் முதலாளிகளிடம் இருந்து எவ்வளவு பணம் நன்கொடையாக பெற்றது என்ற விவரம் மார்ச் 31-ந்தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:-சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.தற்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் மூலம் பா.ஜனதா பெற்ற 90 சதவீத நன்கொடைகள் அம்பலமாகப் போகிறது.யார் பணம் கொடுத்தார்கள். அவர்கள் பணம் கொடுத்தபோது, அதற்கு பிரதிபலமான கட்சி கொடுத்தது என்ன? என்பதை உலகம் தெரிந்து கொள்ள போகிறது. அரசியல் கட்சிக்கு ஏன் பணம் கொடுக்கப்பட்டது என மக்கள் கேள்வி கேட்பார்கள். அதன்பின் மக்கள் தனது சொந்த முடிவை எழுதுவார்கள்.இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button