தமிழகம்

சென்னை அண்ணா நகரில், என் வீட்டுலேயே 1 அடிக்கு வீட்டுகுள்ள தண்ணி வந்துருச்சு?ஏன் வரி கட்டுறோம் என கேள்வி கேட்க வைக்காதீங்க.. எம்.எல்.ஏக்கள் இப்பவாவாது முகத்தை தொகுதி பக்கம் காட்டுங்க, என நடிகர் விஷால் திடீர் வீடியோ வெளியீடு?

advertisement by google

என் வீட்டிலேயே மழைநீர் தேங்கியுள்ளது எனக்கு ரொம்ப கேவலமாக உள்ளதாக நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

advertisement by google

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக நகர வெள்ளக்காடானது,. இதையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டினை மழைநீர் சூழ்ந்தது.

advertisement by google

இதையடுத்து நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ: எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இப்ப பெய்யுற மழையால் முதல்ல நடக்கிற விஷயம் கரண்ட் ஆப் ஆயிடும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக தெருவுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடும். அப்புறமாக இருக்கிற தண்ணி எல்லாமே வீடுகளுக்குள் புக ஆரம்பித்துவிடும்.

advertisement by google

இப்ப நான் அண்ணா நகரில் தங்கிட்டு இருக்கேன். ஏன் வீட்டுலேயே 1 அடிக்கு வீட்டுக்குள் தண்ணி வந்துருச்சு. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் அப்புறம் யோசிச்சு பாருங்க. .மாநகரில் அனைத்து இடத்திலும் மழை வெள்ள நீர் தேங்குவது ரொம்ப கேவலமான விஷயம்.. ஏன் வரி கட்டுறோம் என கேள்வி கேட்க வைக்காதீங்க.. எம்.எல்.ஏக்கள் இப்பவாவாது முகத்தை தொகுதி பக்கம் காட்டுங்க. இவ்வாறு அந்த வீடியோல் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button