பக்தி

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் பிரமாண்டமான தேரோட்ட திருவிழா✍️13-4 -2023 வியாழக்கிழமையான இன்று 9வதுநாள் திருநாள் மற்றும் தேரோட்டம்✍️ லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் 13-4 -2023 வியாழக்கிழமையான இன்று 9வதுநாள் திருநாள் மற்றும் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

advertisement by google

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை மற்றும் காலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்று வந்தது.
139ஆம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

advertisement by google

இதனையடுத்து, உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. காலை 7.31 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் சுவாமி மற்றும் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

advertisement by google

பின்னர் 9.55 மணிக்கு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, முதலில் சுவாமி தேரும், அதைத் தொடர்ந்து அம்பாள் தேரும் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
மதிமுக தலைமை கழகச் செயலர் துரை வைகோ, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. ஆர். அருணாச்சலம், நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.

advertisement by google

தேரோட்டத்திற்கு கோவில்பட்டி கம்மவார் சங்கத் தலைவர் எஸ்.ஹரிபாலகன் தலைமை வகித்தார். செயலர் அழகர்சாமி, பொருளாளர் என்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பட்டுராஜன், ஜெனரேஸ்,இணைச் செயலர்கள் லெட்சுமணன் செந்தில்குமார், துணைச் செயலர்கள் மாரிச்சாமி, அய்யலுசாமி, சட்ட ஆலோசகர்கள் பால்ராஜ், ரெங்கநாயகலு,கம்மவார் மகாஜன சங்க மண்டலத் தலைவர் பொன்ராஜ், கம்மவார் சங்க முன்னாள் தலைவர்கள், வெங்கடேசன் சென்னகேசவன் கனகராஜ், ஆர்.வி.எஸ்.துரைராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

advertisement by google

விழாவில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர்,கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலை ப்ரியா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கௌதம், ஆர்.எஸ்.ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி,திமுக அமலிபிரகாஷ், வார்டு கவுன்சிலர் .A. ஜாஸ்மின் லூர்துமேரி,,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் , அதிமுக நிர்வாகி செல்வகுமார் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

advertisement by google

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கே. வெங்கடேஷ் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினர் உள்பட 160 போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நாளை 14-4-2023 தீர்த்தவாரியும், நாளை மறுநாள் 15-4-2023 தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button