கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் பொங்கல் திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்கம்✍️இதற்காக பந்தல் கால் நாட்டு விழா இன்று காலை வாணவேடிக்கைகள் முழங்க நடைபெற்று சிறப்பிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
பொங்கல் திருவிழாவையொட்டி கோவில்பட்டி மாலையம்மன் கோவிலில் கால்நாட்டு விழா*
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் பொங்கல் திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக பந்தல் கால் நாட்டு விழா இன்று காலை வாணவேடிக்கைகள் முழங்க நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு வணிக வைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் திருக்கோவில் பந்தல் கால் நடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சங்கத் தலைவர் பூவலிங்கம், முன்னாள் சங்க செயலாளர் பழனிகுமார், கவுரவ ஆலோசகர் மாதவராஜ், இணைச்செயலாளர் காளிதாஸ், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ரத்தினவேல், துணைத் தலைவர் பரமசிவம், முன்னாள் சங்க பொருளாளர் கருப்பசாமி, நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் சங்க உறுப்பினர்கள் முனியசெல்வம், கண்ணன், செல்வம், நம்பிராஜன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.