கல்வி

கோவில்பட்டி மந்திதோப்பு அரசுஉதவி பெறும் செண்பகராஜன் நினைவு தொடக்கப்பள்ளிகூட 89வது ஆண்டுவிழா✍️ ஆணிப்படுக்கையில் யோகா செய்து அசத்திய மாணவ, மாணவியர்✍️கல்வி, விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

ஆணிப்படுக்கையில் யோகா செய்து அசத்திய மாணவ, மாணவியர்
கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் செண்பகராஜன் நினைவு தொடக்கப்பள்ளிகூட 89வது ஆண்டு விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

advertisement by google

இதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், ஆடல்,பாடல், பேச்சுப் போட்டி, சிலம்பம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன,. ஆணிப்படுக்கையில் யோகா செய்து மாணவர் மற்றும் மாணவியர் அசத்தினார்கள். பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

advertisement by google

நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் சங்கர கோமதி, கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சி உதவி இயக்குனர் சவுந்தர்ராஜன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பவுன் மாரியப்பன், அலெக்ஸ் ஜார்ஜ், மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி மணி, ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.. பள்ளி ஆசிரியை லில்லி சாராள் வரவேற்று பேசினார்.

advertisement by google

. தலைமை ஆசிரியை எஸ்தர் மெர்சி சவுந்தரத்தாய் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மனநலத்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியரும் துறைத் தலைவருமான ரமேஷ் பூபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.. செண்பகராஜன் நினைவு தொடக்க பள்ளியின் நிர்வாகி பவானி வரவேற்றுப் பேசினார். கல்வி, ஒழுக்கம், விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு செண்பகராஜன் நினைவு தொடக்க பள்ளியின் நிர்வாகி

advertisement by google

சிவகணேஷ்குமார் செல்வமாரி பரிசுகளை வழங்கினார். முடிவில் ஆசிரியை ஜோசப் மகராசி நன்றி கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button