t

இந்திய மூவர்ண கொடியை ஏந்தி.. பாரத்மாதாகீ ஜே என்ற முழக்கத்துடன் உக்ரைனிலிருந்து தப்பும் பாக்கிஸ்தான் மாணவர்கள்✍️திரும்பிபார்க்கும் உலகநாடுகள்✍️வின்மீன் நியூஸ்

advertisement by google

பாரத் மாதா கீ ஜே முழக்கத்துடன்.. இந்திய மூவர்ண கொடி ஏந்தி.. உக்ரைனிலிருந்து தப்பும் பாக். மாணவர்கள்*

advertisement by google

கீவ்: போர் நடக்கும் உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான், துருக்கி மாணவர்களுக்கும் இந்திய தேசியக்கொடி உதவி செய்துள்ளது. இதை பகிரங்கமாக பாகிஸ்தான் மாணவர் ஒருவர் அந்தநாட்டின் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். இது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

advertisement by google

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் உருக்குலைந்துள்ளது. ஏவுகணை, குண்டுவெடிப்பு தொடர்ந்து நிகழ்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

advertisement by google

உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் நாடு திரும்பி வருகின்றனர். உக்ரைனில் தொடர்ந்து போர் மேகங்கள் அதிகரிப்பதால் இந்த மீட்பு பணியை மத்திய அரசு விரைவுப்படுத்தியுள்ளது. மீட்பு பணிக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement by google

இதற்கிடையே உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்புக்காக இந்திய தேசியக்கொடியுடன் வருகின்றனர். தேசிய கொடியுடன் வந்தால் ரஷ்ய ராணுவம் எதுவும் செய்வது இல்லை. இவர்கள் உக்ரைனை விட்டு ஓரளவுக்கு பத்திரமாக வெளியேறி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான், துருக்கி மாணவர்களும் இந்திய தேசியக்கொடியை பயன்படுத்தி வெளியேறி வருகின்றனர்.

advertisement by google

இதை பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அந்நாட்டு மாணவர் ஒருவர் பகிரங்கமாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் தாக்குதலும் ஆளாகாமல் பாதுகாப்பாக வெளியேற முடிகிறது. இதனால் பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத மாதா கீ ஜே எனக்கூறி எல்லையை அடைகின்றோம்” என கூறியுள்ளார். இது இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

advertisement by google

இதற்கிடையே உக்ரைனில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் மாணவ, மாணவியரை மீட்க அந்த நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது அந்தநாட்டு மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், போரில் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் உக்ரைன் ராணுவத்தினர் இந்திய மாணவ மாணவிகளை தாக்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இந்திய தேசியக் கொடிதான் தங்கள் நாட்டு தேசியக் கொடியை விட பாதுகாப்பானது என்று உணர்ந்துள்ளனர் பாகிஸ்தான் மாணவர்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button