இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்தி

விரிவான காலைசெய்திகள் (28.9.2019)தமிழகம் இந்தியாஉலகம்

advertisement by google

???? ?விண்மீண்நியூஸ்????

advertisement by google

திருவண்ணாமலை : நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் 5 பேர் கொண்ட கும்பல் கைது

advertisement by google

கொள்ளையர்களிடமிருந்து 2 சரக்கு லாரிகள் மற்றும் ரூ.10.57 லட்சம் பறிமுதல்.

advertisement by google

#Tiruvannamalai

advertisement by google


[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்்

advertisement by google

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவும் வேட்பாளரை களமிறக்குவதாக நேர்காணலை நடத்தியுள்ளது.
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2:

advertisement by google

“பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால், பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்..!”

advertisement by google

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

#SellurRaju | @AIADMKOfficial
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – கனிமொழி எம்.பி.

தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும், தமிழ அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் – கனிமொழி

#Kanimozhi


[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2: ✍கோவை : தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 168 பெண்கள் உள்பட 550 வனக்காப்பாளர்கள், 45 டிரைவர்கள் ஆகியோருக்கு கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது

6 மாதமாக நடைபெற்ற பயிற்சியில் தீ தடுப்பு, மனித விலங்குகள் மோதல் தடுப்பு, நீர் மேலாண்மை, கவாத்து, யோகா, வாகனம் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும் வனக்காப்பாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் வன ஆராய்ச்சி நிலையங்கள், வன தோட்டங்கள், சதுப்பு நில காடுகள் என வனப்பகுதிகளில் 15 நாட்கள் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் 550 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கும் 45 ஓட்டுநர்களுக்கும் இன்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைதொடர்ந்து பயிற்சி பெற்ற வனக்காப்பாளர்கள் செய்த சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 168 பெண்கள் உள்பட 550 வனக்காப்பாளர்கள் 45 ஓட்டுனர்கள் ஆகியோருக்கு கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
6 மாதமாக நடைபெற்ற பயிற்சியில் தீ தடுப்பு, மனித விலங்குகள் மோதல் தடுப்பு,நீர் மேலாண்மை, கவாத்து, யோகா, வாகனம் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும் வனக்காப்பாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் வன ஆராய்ச்சி நிலையங்கள்,வன தோட்டங்கள்,சதுப்புநில காடுகள் என வனப்பகுதிகளில் 15 நாட்கள் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் 550 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கும் 45 ஓட்டுநர்களுக்கும் இன்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற வனக்காப்பாளர்கள் செய்த சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், முதல்வருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயிற்சி நிறைவு செய்த வனகாப்பாளர்கள் மத்தியில் பேசுகையில், வனத்துறையைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகின்றது என தெரிவித்தார். மாநிலத்தின் வனப்பரப்பு 33 விழுக்காடு எட்டிடும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என கூறிய அவர், தற்போது தமிழகத்தில் வனப்பரப்பளவு 20.21 விழுக்காடு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், 2021ல் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என இலக்காக கொண்டு இந்த அரசு செயல்படுவதாகத் தெரிவித்த அவர், வனத்துறை பணியில் ஈடுபட இருக்கும் வனக்காப்பாளர்களுக்கு வனம் சார்ந்த பல்வேறு பணிகள் காத்திருக்கின்றது என்றும் அதற்குத் தயாராக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2:

மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தயாரிக்கும் மூலதன செலவீனம் குறித்த அறிக்கையை, நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்

மாநிலத்தில் காற்றாலை மின்னுற்பத்தி இம்மாதத்துடன் நிறைவடைந்தாலும் மின் தடை இருக்காது

  • மின்துறை அமைச்சர் பி தங்கமணி


[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2: ✍✅நீலகிரி : சென்ற மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கொட்டித் தீர்த்த கன மழையில் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என அவலாஞ்சி மழை சேதங்களை ஆய்வு செய்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் அவலாஞ்சி பகுதியில் பணிபுரிந்து வரும் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கித் தவித்தனர். அதில், காட்டுகுப்பை பகுதியை சேர்ந்த மின்நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி இன்று அவலாஞ்சி மின் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணி இடங்கள் விரைவில் நிரப்பபடும் என உறுதியளித்தார்.
மேலும், கன மழையால் பாதிக்கபட்ட அவலாஞ்சி மின் வாரிய ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஆம்புலென்ஸ் வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டம் ஜில்லா ஹல்லா பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட்டில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், ஆனால் வனத்துறை அனுமதி இன்னும் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர், காட்டுகுப்பை மின் உற்பத்தி மையத்திற்கு சென்று ஆய்வு நடத்திய பின், மின் ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பாராட்டினார். நிறைவாக புதிதாக நடைபெற்று வரும் மின் உற்பத்தி சுரங்க பாதை பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2: ♦தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற IFS அதிகாரி

?தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக முதல் முறையாக ஓய்வுபெற்ற IFS அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள்ளார்.

?TNPCB தலைவராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்ற வெங்கடாச்சலம் IFS நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

?கடந்த ஜூன் மாதம் உருவாக்கப்பட்ட TNPCB தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் நியமன விதிகளின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

?அரசு தாங்கள் விரும்பும் யாரையும் தலைவராக நியமித்துக் கொள்ளும் படியாக விதிகள் இருந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்திருந்தனர்.


[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2: ✍கோவை : நீட் தேர்வுகளில் முறைகேடுகள் எனத் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் புகைப்படம், ஆவணங்களைப் பத்திரிகையாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மருத்துவப் படிப்பு படிப்பதற்கு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு நீட் என்ற தேர்வை கொண்டு வந்தது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நீட் தேர்வு எழுதும் முன்பு, மாணவர்களிடையே பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். இந்த சோதனைகளைத் தொடர்ந்தே மாணவர்கள் தேர்வறையில் தேர்வெழுத முடியும

இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக்கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தாய் மற்றும் தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் புகைப்படம், ஆவணங்களை, பத்திரிகையாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅2019-ம்‌ ஆண்டின்‌ வடகிழக்கு பருவமழைக்‌ காலத்திற்கான (அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ டிசம்பர் மாதம்‌ வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள பயிர் மேலாண்மை இயக்கத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜீலை மற்றும்‌ ஆகஸ்ட்‌ மாதங்களில்‌ பசிபிக்‌ பெருங்கடலில்‌ பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின்‌ மேற்பரப்பு நரின்‌ வெப்பநிலை மற்றும்‌ தென்‌ மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்‌ (கம விரவு Rainman International V.4.3 Software) etestepyip கணினி கட்டமைப்பைக்‌ கொண்டு 2019-ம்‌ ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

தமிழ்நாட்டின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ 2019-ம்‌ ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை 60 சதவிகித வாய்ப்பிற்கு சராசரி மழையளவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மற்றும்‌ செப்டம்பர் மாதங்களில்‌ சராசரி மழையளவைக்‌ காட்டிலும்‌, அதிக மழை பெறப்பட்டதால்‌, மண்ணில்‌ போதுமான அளவு ஈரப்பதம்‌ இருக்கும்‌. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள்‌ விதைப்பு செய்வதன்‌ மூலம்‌, பயிரின்‌ முதன்மை தேவையை பூர்த்தி செய்ய முடியும்‌. 2019-ம்‌ ஆண்டிற்கும்‌ சராசரி வடகிழக்குப்‌ பருவமழை எதிர்பார்க்கப்படுவதால்‌, தற்போது விதைக்கும்‌ பயிர்கள்‌ நல்ல வளர்ச்சியும்‌ மகசூலும் பெற முடியும்‌.
[9/28, 6:38 AM] விண்மீண்நியூஸ்2: ✍மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் நடுக்காட்டில் மலை ரயில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மலை ரயில் ரத்து செய்யபட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மலை ரயில், தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதைக்கு இயக்கப்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த ரயில் பயணித்து அடர்ந்த வனத்தின் நடுவே உள்ள இயற்கை அழகினை ரசிக்க இந்தியா மற்றும் இன்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 200 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் புறப்பட்டுச் சென்றது. ரயில் கல்லாரினை தாண்டி ஹில்கிரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது மலை ரயில் பாதையில் பாறை உருண்டு விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்தது. இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனையடுத்து தண்டவாளம் சேதமானது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சேதமடைந்த தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியினை மேற்கொண்டனர். இருப்பினும் ராட்சத பாறையைத் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த இரண்டு மணி நேரமாக போராடியும் முடியாததால் பயணிகள் நடுக்காட்டில் சிக்கித் தவித்தனர். பின்னர், சீரமைப்பு பணி நிறைவடையாததால் ரயில் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது..
கல்லார் ரயில் நிலையம் வரை பயணிகளுடன் வந்த மலை ரயிலில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இறக்கி விடப்பட்டு அரசு பேருந்துகள் மூலம் உதைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.
[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருக்கான தேர்தலில் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் வெற்றி..

#MohammadAzharuddin #HyderabadCricketAssociation


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“வனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது; தமிழகத்தில் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்…!” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

@CMOTamilNadu | #Forest
[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2:

“2 மாத வாடகையை தான் முன்பணமாக வாங்க வேண்டும்” – மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டம் வெளியீடு

#RentalHome | #RentalLaw


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து 2 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தகவல்.

#NationalEducationPolicy | #CentralGovt | #HighCourt
[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2:

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு.

#BanwarilalPurohit | #TamilisaiSoundararajan


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“என் குடும்பத்தில் நல்ல கலைஞன் இல்லை எனக் கூறி கலைஞாக்கினார் இயக்குநர் பாலச்சந்தர்

இன்னும் நான் கற்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது…!”

  • கமல்ஹாசன் பேச்சு

@ikamalhaasan


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம், அரசு துறைகள், ஆட்சேபை மனுதாரர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த தின விழாவை கொண்டாடும் வேளை இது – நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேச்சு.

இந்தியாவில் 100 கோடிக்கு மேலானோர் வாக்களித்து இந்த அரசை தேர்வு செய்தனர் – பிரதமர் மோடி

கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்கள் அரசு அமைத்துள்ளது – பிரதமர் மோடி

இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

5 ஆண்டுகளில் 370 மில்லியன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் துவங்கியுள்ளோம் – பிரதமர் மோடி

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்து வருகிறோம் – பிரதமர் மோடி

#Plastic
#NarendraModi | #NewYork


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மலேசியா, திருவனந்தபுரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 36 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

#Gold | #Smuggling
[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஊரக பகுதிகளை தொலை தொடர்பு மூலமாக இணைக்க திட்டம் – பிரதமர் மோடி

எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு – பிரதமர் மோடி

எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும் – பிரதமர் மோடி

யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியது – பிரதமர் மோடி

எங்களுக்கென தனியாக கலை, கலாச்சாரம் இருக்கிறது – பிரதமர் மோடி

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் – பிரதமர் மோடி

#UNGA2019
#NarendraModi


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? ??❀•┈┈•

தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் – பிரதமர் மோடி

2025ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும் – பிரதமர் மோடி

#PMModi | #Modi
[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀

கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிப்பு.

#Karnataka | #Elections | #ECI


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தீவிரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம், அதே நேரம் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் – பிரதமர் மோடி

தீவிரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவளித்து, எங்களை காயப்படுத்தி வருகின்றன – பிரதமர் மோடி

சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த திட்டங்கள் தீட்டி இருக்கிறோம் – பிரதமர் மோடி

உலக வெப்பமயமாதலை தடுப்பதை நினைவில் கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம் – பிரதமர் மோடி

#Terrorism | #PMModi


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கர்நாடகா சபாநாயகர் 15 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது

#Karnataka


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருக்குறள் உள்ளிட்ட தமிழ் மொழி சார்ந்த பகுதிகள் பிரதானத் தேர்வுக்கு மாற்றப்பட்டதால் முதல்நிலைத் தேர்வில் குறைப்பு; தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை

  • டி.என்.பி.எஸ்.சி #TNPSC #Group2Exam


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தருமபுரி: நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தருமபுரியைச் சேர்ந்த மாணவரிடம் விசாரணை நடைபெற்றது.

மதிப்பெண்ணில் மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி அதிகாரிகள் புகாருக்கு உள்ளான மாணவரை அழைத்து விசாரித்தனர்.

மாணவரின் ஆவணங்களை சோதித்தபோது தவறு நடக்கவில்லை என்று தெரிய வந்தது.


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் மூன்று நாட்களில் வெளியே வந்துவிடுவார் என்று வழக்கறிஞர் தமிழ்மணி கூறியுள்ளார்.


[9/28, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத் தொகையை பல மடங்கு உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது

advertisement by google

Related Articles

Back to top button