இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறை சார்பில் பெண்களின் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி✍️பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளை காவல்துறைக்கு ரகசியமாக தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களின் தொலைபேசி எண்கள்✍️ முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

பள்ளி மாணவிகள் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தால் ரகசியமாக பாதுகாக்கப்படும்- எஸ்பி.ஜெயக்குமார் தகவல்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளை காவல்துறைக்கு ரகசியமாக தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்கள் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் கொடுக்கும் புகார்கள் ரகசியமாக விசாரிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறை சார்பில் பெண்களின் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி
மில்லர்புரத்திலுள்ள பி.எம்.சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளின் பாதுகாப்புக்கென உள்ள போக்சோ சட்டம் பற்றியும், குழந்தை திருமண தடை சட்டம் பற்றியும், காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி பற்றியும், பெண்கள் பாதுகாப்புக்கென அரசு வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண்- 1091 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்-1098 பற்றியும், இது தவிர ஆண்கள், பெண்கள், மாணவி, மாணவிகள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலை பேசி எண் -100ஐ தொடர்பு கொள்ளலாம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ் எண். 95141 44100 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்வது பற்றியும் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் செல்போன் எண் கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பள்ளி மாணவிகள் காவல்துறை அதிகாரியிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தால் அவர்கள் புகார் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி.ஜெயக்குமார் தெரிவித்தார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button