பயனுள்ள தகவல்மருத்துவம்

உங்க முகம் டக்குனு பளபளப்பா மாறணுமா✍️உங்க வீட்ல இருக்க இந்த 3 பொருளை சேர்த்து கலந்து, முகத்தில் ஒரு வாட்டி ஃபேஸ் பேக் போட்டு பாருங்களேன்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? உங்க வீட்ல இருக்க இந்த 3 பொருளை சேர்த்து கலந்து, முகத்தில் ஒரு வாட்டி ஃபேஸ் பேக் போட்டு பாருங்களேன்! உங்க முகம் டக்குனு பளபளப்பா மாறிடும்

advertisement by google

நாம எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்றால் பியூட்டி பார்லருக்கு தான் போக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. நிறைய தண்ணீரை குடித்து, எப்போதுமே மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டே இருந்தால் நம்முடைய முகமும் அழகாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இது முதல் டிப்ஸ்.

advertisement by google

இரண்டாவதாக, நமக்கு இருக்கக்கூடிய அழகை மேலும் அழகுபடுத்திக் கொள்ள நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சுலபமான ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

advertisement by google

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க உங்கள் வீட்டில் இருக்கும் காப்பித்தூள், கோதுமை மாவு, தயிர், இந்த 3 பொருட்களே போதும்.

advertisement by google

ஒரு சின்ன பவுலில் 1 ஸ்பூன் அளவு காபி தூள், 1 ஸ்பூன் கோதுமை மாவு, கெட்டித் தயிர் 1 ஸ்பூன், இந்த மூன்று பொருளையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் கலக்கிக் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

advertisement by google

உங்களுடைய முகத்தில் முகப்பருக்கள் எதுவுமே இல்லை என்றால், இந்த பேஸ்டை முகத்தில் தடவி மூன்று நிமிடங்கள் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்த பின்பு ஐந்து நிமிடங்கள் வரை அந்த ஃபேஸ் பேக்கை முகத்திலேயே விட்டுவிட்டு, அதன் பின்பு குளிர்ந்த தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம். ஒருவேளை உங்களுடைய முகத்தில் முகப்பரு இருக்கின்றது என்றால், அழுத்தம் கொடுத்து தேய்த்து எந்த ஃபேஸ் மசாஜும் செய்யக்கூடாது. முகப்பரு வேறு இடத்தில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. முகப்பரு உள்ளவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை முகப்பரு உள்ள இடங்களில் நன்றாக அடர்த்தியாக அப்ளை செய்து கொள்ளுங்கள். மற்ற இடங்களில் சாதாரணமாக தடவி விட்டுவிடுங்கள். 20 நிமிடங்கள் வரை அப்படியே ஊறட்டும்.

advertisement by google

இந்த பேஸ் முகத்தில் நன்றாக காய்ந்து விடும். அதன் பின்பு சுத்தமான தண்ணீரை வைத்து நன்றாக கழுவிவிடுங்கள் முகப்பரு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதேபோல் முகத்தில் ஏதாவது மேக்கப் போட்டு இருந்தால் அந்த மேக்கப்பை சுத்தமாக துடைத்துவிட்டு, அதன் பின்பு எந்த ஒரு ஃபேஸ் பேக் கையும் அப்ளை செய்து கொள்ளுங்கள். முடிந்தால் பச்சை பாலை காட்டன் துணியில் தொட்டு, முகத்தை நன்றாகத் துடைத்து விட்டு அதன் பின்பு ஃபேஸ் பேக் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. பார்லருக்கு போக நேரமில்லை, பணம் இல்லை, உடனடியாக ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 20 நிமிஷத்துல ரெடியா ஆயிடலாம். உடனே உங்க முகத்துக்கு ஒரு பளபளப்பு கிடைக்கும். இத ட்ரை பண்ணி பாருங்க! வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button