இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

சரியான திசையில் செல்லும் இந்தியா? சர்வதேச அமைப்பு பாராட்டு?

advertisement by google

சரியான திசையில் செல்லும் இந்தியா ; சர்வதேச அமைப்பு பாராட்டு

advertisement by google

புதுடில்லி : கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என சர்வதேச அமைப்பு பாராட்டியுள்ளது.

advertisement by google

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் வைக்க ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

advertisement by google

இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சமூக இடைவெளி , மக்களுக்கான பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான நிதி , சலுகைகள் வழங்கள் போன்ற பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

advertisement by google

இந்நிலையில் கொரோனா வைரசிற்கான எதிர்ப்பு மற்றும் தடுப்பு கால நடவடிக்கையில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பான ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா. பொருளாதார, சமூக கமிஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டதாவது :

advertisement by google

கொரோனா வைரசினால் ஆசிய , பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மந்தநிலையை நிராகரிக்க முடியாது.

advertisement by google

இதனால் பல வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு செல்லும். இதற்கான நிச்சயமற்ற தன்மை எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்.

advertisement by google

முன்னெப்போதும் இல்லாத வகையில் சுகாதார பிரச்னைகள் மற்றும் நிதி போன்ற பல செயல்பாடுகளிலும் நெருக்கடியை சந்தக்க வேண்டியதாகயிருக்கும். ஆயினும் அதை சமாளிக்க பொருளாதார திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

சுகாதார பிரச்சினைகளுக்கு பதில் அளிப்பவர்களின் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதில் நிதி செலவினங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும். மேலும், தொற்றுநோய் பரவுதலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சுகாதார அவசர தயார்நிலையை மேம்படுத்தும்.

பொருளாதார கொள்கைகளை வகுக்கும்போது சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுசூழல் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் மக்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டது.

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button