இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

வீட்டுக்குவீடு ஊட்டச்சத்து உணவு உண்போம் , மணிகண்டம் வட்டாரகுழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெற்றது

advertisement by google

வீட்டுக்கு வீடு ஊட்டச்சத்து உணவு உண்போம்

advertisement by google

தேசிய ஊட்டச்சத்து குடும்பம் போஷான் அபியான் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதையொட்டி மணிகண்டம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளக்காடு பகுதியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர் லட்சுமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் , பள்ளக்காடு மானிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர் லட்சுமி பேசுகையில் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து உணவினை உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் வேண்டும் என்றார். பள்ளக்காடு மானிய நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய வரைபட வடிவில் மாணவர்கள் அங்கன்வாடி, பணியாளர்கள் நின்று ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் நான் இன்று இந்தியாவின் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீட்டெடுத்து வலிமையானவர்களாக மாற்ற உறுதி மொழி ஏற்கிறேன். ஆரோக்கியம் என்றால் சத்தான உணவு, தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் ஆகும். தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் போது நான் இந்த கருத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்ப்பேன். நான் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை போஷன் அபியான் ஒரு தேசிய அளவிலான மக்கள் இயக்கமாக உருவாக்குவேன். ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலும், கிராமத்திலும், நகரத்திலும் ஊட்டச்சத்தின் மகத்துவத்தை பேரொளியாக எழுப்புவேன். இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம் பாரத நாட்டின் சகோதர ,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகவும் திறமையானவர்களாக உருவெடுப்பர்.
இது என் சபதம் ஆகும். ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசம் ஆகும் என உறுதி மொழி ஏற்றனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button