இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நண்பகல் விரிவான செய்திகள் (21.9.2019)Flashலதாரஜினிகாந்த் மத்திய மைச்சருடன் சந்திப்பு

advertisement by google

???விண்மீண்நியூஸ்???மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

advertisement by google
  • ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் அமைதியையும், பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான கல்வியாளராக லதா ரஜினிகாந்த் பாராட்டத்தக்க வேலையைச் செய்கிறார் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பாராட்டு.
    [9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ?♨வரலாற்றை மாற்றி அமைக்கும் கீழடி நாகரிகம் ?

வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

advertisement by google

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே மிகப்பெரியது கீழடி அகழாய்வுதான். சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் உலகப் புகழ்பெற்ற அறிவியல் கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

advertisement by google

கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம பகுப்பாய்வுகள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையில், பானை ஓடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

advertisement by google

செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், தொழில் கூடங்கள், வணிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் நகர நாகரிகம் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வெளிகொணரப்பட்ட மட்கலன்கள் மூலம், வட இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியில் நகரமயமாதலும் வைகைக் கரையின் நகரமயமாதலும் ஒரே காலக்கட்டம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது கி.மு. ஆறாம் நூற்றாண்டு.

advertisement by google

கரிம பகுப்பாய்வு முறைப்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வு இடத்தில் உள்ள எலும்புத் துண்டுகள் மூலம், திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. சன்னமான களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து, இரும்பு ஆணிகள் பயன்படுத்தி கட்டுமானத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சங்க காலச் சமூகம் எழுத்தறிவு பெற்று இருந்ததற்கான சான்றுகளாக ஆதன், குவிரன் போன்ற ஆட்பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கருப்பு சிவப்பு நிறப் பானை, மண் பானை, நூல் நூற்கும் தக்களிகள், கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. அரவைக் கல், மண் குடுவை, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கக்காய்கள் பகடைக்காய், சூதுபவள மணிகள், ரெளலட்டட் சாயல் கொண்ட பானை ஓடுகள், சுடுமண் வார்ப்பு, மனித உடல் பாகம், காளையின் தலை, மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
. .

advertisement by google

விண்மீண்நியூஸ்2:

தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்

ஐநாவில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்

பிரதமர் மோடி ட்வீட்


[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ?♨அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது எஸ்.பி.அலுவலகத்தில் புகார்

வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஈரோடு மாநகர காங்கிரஸ் சார்பில் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் குடியுரிமை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜேந்திர பாலாஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
. .
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: •┈

சேலம் ரயில் நிலையத்திற்கு கடிதம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்

மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை

•┈┈•┈•
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ?♨சீமானைப்போல கீழ்த்தரமான ஆள பார்த்ததே இல்ல…!! கல்லூரி பேராசிரியை கடும் தாக்கு…!!

சீமானை போல ஒரு மோசமான அரசியல் வாதியை இதுவரை நான் கண்டதில்லை என சமூக செயற்பாட்டாளரும் பேராசிரியையுமான சுந்தரவல்லி பகிரங்கமான குற்றஞ்சாட்டியுள்ளார்.

【♨】⚘நேசம்.காம்⚘_?
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ?♨விக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் – ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு!

இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திரயான்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திரயான்-II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது.

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி, ஜூலை 15ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டது. சந்திரயான்-2 விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்களை வைத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அவை ஆர்பிட்டர் (Orbiter), லேண்டர் (Lander), ரோவர் (Rover). ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-III-ன் மூலம் ஏவப்படும் எனப்பட்டது. லேண்டரினுள் ரோவர் பொருத்தப்பட்டது. சந்திரயான்-2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும் எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் லேண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தும் எனவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.

திட்டமிட்டபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, பாகுபலி என வர்ணிக்கப்படும் மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு ஆவலுடன் திரண்டிருந்தனர். ஆனால் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், அதாவது அதிகாலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ விளக்கம் அளித்தது. சந்திரயான்-2 விண்கலம் வேறொரு நாளில் ஏவப்படும் என தெரிவித்த இஸ்ரோ, ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியது.

அதைத்தொடர்ந்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, பிப்ரவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியின் வட்டப் பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது. சந்திரயான் – 2 விண்கலத்தை செலுத்திய இஸ்ரோவுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’ உடனடியாக வாழ்த்து தெரிவித்தது.

இதனையொட்டி சந்திரயான் – 2வின் சுற்றுவட்டப் பாதைகள் அனைத்து வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டன. பின்னர், ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன்படி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்து சென்றது. இது இஸ்ரோவின் மைல் கல்லாக பார்க்கப்பட்டது.

‘சந்திரயான் 2’ திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வை நேரலையில் காண, பெங்களூருவிலுள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், பூடானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு திரண்டிருந்தனர். விஞ்ஞானிகள் மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்க, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கத் தொடங்கியது.

திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ மையமே நிசப்தமானது. பின்னர், பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று அறிவித்தார். எனினும், எதிர்வரும் விண்வெளித் திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார்.

இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து கிளம்பினார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன், மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவரைக் கட்டித் தழுவிய பிரதமர் மோடி, அவரைத் தேற்றி ஆறுதல் கூறினார். இதைக் கண்ட அங்கிருந்த மற்ற விஞ்ஞானிகளும் கண்கலங்கினர்.

இந்தச் சம்பவம் இந்திய அளவில் சோகத்தை, உலக அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இஸ்ரோவுக்கு துணை நிற்போம் என ‘நாசா’ குரல் உதவிக்கரம் நீட்டியது. பின்னர் சந்திரயான் 2-ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆனால் லேண்டரிலிருந்து எந்தத் தகவலை பெற முடியவில்லை. அதன் சிக்னலையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்ந்து இஸ்ரோ போராடி வந்த நிலையில், சிக்னலை தொடர்பு கொள்ளும் ‘நாசா’வின் முயற்சியும் தோல்விலேயே முடிந்தது.

இந்நிலையில், சந்திரயான் – 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இன்றுடன் முடிகிறது. நாளை முதல் சந்திரனில் 14 நாள் இரவுக் காலம் தொடங்கிவிடும் என்பதால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது இயலாததாகி விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த 14 நாட்கள் நிலவில் சூரிய ஒளி இருக்காது என்பதால் மின் சக்தியை பெற இயலாது என்பதுடன் கடும் குளிர் நிலவும் என்பதால் மின்னணு பாகங்கள் செயலிழந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

லேண்டரை ஒருபுறம் தொடர்பு கொள்ளமுடியாவிட்டாலும், மறுபுறம் சந்திரயான் – 2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தன்னுடைய இணைய பக்கத்தில் சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், “ஆர்பிட்டரில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் செயல்படுகிறது. ஆர்பிட்டர் தொழில்நுட்பத்தின் தொடக்க பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

. 【♨】⚘நேசம்.காம்⚘_?
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ?♨திருவல்லிக்கேணியில் பழிக்குப்பழி:

வீடு புகுந்து ரவுடி படுகொலை

கொலை வழக்கு குற்றவாளி தலையை வெட்டி மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம்

2 பேர் வெறிச்செயல்:தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல்வேட்டை

சென்னை,செப்.20–

கொலை வழக்கு குற்றவாளி ஓருவரின் தலையை வெட்டி மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம் திருவல்லிக்கேணியில் அரங்கேறியிருக்கிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் முன்விரோதம் காரணமாக 2 பேர் வீடு புகுந்து ரவுடியை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டான்குப்பம் கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அறிவழகன் (வயது 24). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது. ரவுடி பல்புகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் அறிவழகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் மாட்டான்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் அறிவழகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் அருகில் உள்ள வேறு வீட்டில் இருந்துள்ளனர். இந்த நேரத்தில் அறிவழகன் வீட்டுக்குள் 2 பேர் திடீரென புகுந்தனர். அவர்களது கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவழகன் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் 2 பேரும் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அறிவழகனின் தலை, முகம், கை, கால்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் பலியானார். அதோடு விடாமல் கொடூரமாக அறிவழகன் தலையை வெட்டி அவர் மூளையை வெளியே துண்டித்து எடுத்து அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் வைத்துவிட்டு கொடூரக் கொலைகாரர்கள்

2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டனர்.. கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்தும் அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அறிவழகனை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உடனடியாக துப்பு துலங்கியது. அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அறிவழகனுக்கும் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அறிவழகன் அந்த பெண்ணின் ஆடையை கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அறிவழகனுக்கும் அந்த பெண்ணின் மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாகவே அவர்கள் இருவரும் சேர்ந்து அறிவழகனை வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அறிவழகன் கொலையில் கொலையாளிகளின் தாய்க்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகிறார்கள். ரவுடி அறிவழகன் கொலை காரணமாக மாட்டாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதனையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க அப்பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
. ♨
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ?♨ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 7% அதிகரிப்பு: வர்த்தக மதிப்பில் மும்பை இந்தியன்ஸ் முதலிடம்

2019-ல் ஐபிஎல் கிரிக்கெட் டி20 லீகின் பிராண்ட் மதிப்பு 7% அதிகரித்து 6.8 பில்லியன் டாலர்களாக அதன் மதிப்பு உயர்ந்துள்ளது.

4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸின் வர்த்தக மதிப்பு 8.5% அதிகரித்து ரூ.809 கோடியாக அதிக வர்த்தக மதிப்புடைய அணியாகத் திகழ்கிறது.

ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டு 6.3 பில்லியன் டாலர்களாக இருந்தது நடப்பு ஆண்டில் 6.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனை உலக பிராண்ட் மதிப்பாய்வு நிறுவனமான டஃப் அண்ட் பெல்ப்ஸ் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் ஐபிஎல் ஈக்கோசிஸ்டம் வேல்யு சுமார் 13.5% அதிகரித்து ரூ.47,500 கோடியாக உள்ளது.

ஆனால் தனிப்பட்ட உரிமையாளர் பயன் என்று பார்த்தால் அந்தந்த அணியின் கள ஆட்டத்திறன் பொறுத்து அதிகரிப்பதோ, குறைவதோ ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வர்த்தக மதிப்பு தொடர்ந்து 4 வது ஆண்டாக அதிகரித்து ரூ.809 கோடியாக உள்ளது.

இரண்டாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வர்த்தக மதிப்பு 13.1% அதிகரித்து வர்த்தக மதிப்பு ரூ.732 கோடியாக உள்ளது.

டஃப் அண்ட் பெல்ப்ஸ் வர்த்தக மதிப்பாய்வு நிறுவனத்தின் வருண் குப்தா கூறும்போது, “ஐபிஎல் அதன் 2வது பத்தாண்டுக்குள் நுழைந்துள்ளது. ஸ்டார்ட்-அப் ஆக இருந்த ஐபிஎல் வர்த்தகம் தற்போது நிலையான வர்த்தக வழிமுறைகளுக்குள் செட்டில் ஆகி லாபம் தரும் வர்த்தகமாக வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது பிசிசிஐயின் பேடிஎம் டைட்டில் ஸ்பான்ஸ்சர் ஒப்பந்த அளவுகோல்களின்படி பார்த்தால் 2022-ல் மீண்டும் ஸ்பான்ஷர்ஷிப் அழைப்பு விடுக்கும் போது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருக்கும் என்பதால் மேலும் அதன் லாபமும் வருவாயும் அதிகரிக்கும்” என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவின் வர்த்தக மதிப்பு 8% குறைந்து முறையே ரூ.630 கோடி, ரூ.595 கோடியாக உள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வர்த்தக மதிப்பு சீரான முறையில் அதிகரித்து வந்துள்ளது. கடந்த முறை பிரமாதமாக ஆடியதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ 9% அதிகரித்துள்ளது. அதாவது களத்தில் ஆடும் ஆட்டம்தான் அந்தந்த ஸ்பான்சர்கள் விளம்பரதாரர்களைத் திருப்தி படுத்தும், மேலும் நட்சத்திர வீரர்கள் மட்டுமே வர்த்தக மதிப்பை அதிகரித்து விடாது, களத்தில் ஆடும் ஆட்டம், வெற்றிகள் ஆகியவையே வர்த்தக மதிப்பைத் தீர்மானிக்கின்றன என்கிறது ஆய்வு நிறுவனமான டஃப் அண்ட் பெல்ப்ஸ்.

???
 

[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளர் கிருஷ்ணன் என்பவர் ரூ 6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கிருஷ்ணணை கைது செய்தனர்.
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ? வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அனுப்பும் பதிவு தபால்களை திருப்பி அனுபப்படுவதால் பொதுமக்கள் வேதனை. புதியதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி நடவடிக்கை எடுப்பாரா??
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ?♨திமுக பொதுச்செயலாளர் மாற்றம்? க.அன்பழகனுக்கு பிறகு பதவியில்அமரப்போகும் முக்கிய தலைவர்!

அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணி அளவில்சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்து நடவுள்ள பணிகள், சட்ட திருத்தம், தணிக்கை குழுவின் அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், திமுக பொது செயலாளர் க.அன்பழகன் 94 வயதுக்கு மேல் ஆகிறது, அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீப காலமாக முன்பு போல கட்சி பணிகளில் செயல்பட முடியாத சூழ்நிலை உள்ளார். இதனால் அவரது பொறுப்புகளை கவனிக்க திமுகவில் இருக்கும் மூத்த தலைவரக்ளில் ஒருவருக்கு அவரது பொறுப்புகளை கவனிக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. அந்தவகையில், தற்போது நாடாளுமன்ற திமுக குழு தலைவராக உள்ள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவிற்கு இணைப் பொது செயலாளர் பதவி வழங்க்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின. iஇதனை திமுக பொதுக்குழுவில் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.


[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு டோல்கேட் அருகில் டிப்பர் மணல் லாரி திண்டுக்கல் தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி, லாரி கவிழ்ந்து. பேருந்து இருசக்கர வானத்தின் மீது மோதியதில் ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த சோனைமுத்து என்பவர் கால் உடைந்து படுகாயம், கல்லூரி மாணவர்கள் 5-பேருக்கு லேசான காயம்.
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: விருதுநகர் : சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி வைப்பாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய போது, மண் சரிந்து விழுந்ததில் மாரியப்பன்(35), பிள்ளையார்(55) ஆகியோர் உயிரிழப்பு..
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: ராமநாதபுரம் மாவட்ட மீனவ கிராமத்தில் புயல் காப்பகம் அமைக்க கோரிய மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடக்கூடாது – மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கனிமொழி எம்.பி. கடிதம்..
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு |

தமிழர் நாகரீகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என்ற கீழடி ஆராய்ச்சி முடிவுகளை ஆதாரப்பூர்வமாக வெளியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும், முதன்மை செயலர் உதயசந்திரனுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
[9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: பல நாட்டு தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்வாய்ப்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும்

  • பிரதமர் மோடி ட்வீட்
    [9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: சேலம் ரயில் நிலையத்திற்கு கடிதம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்
  • மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை.
    [9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: குஜராத் மாநிலத்தில் சர்வதேச அருங்காட்சியகம் அமைப்பதை போல கீழடியிலும் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்
  • மு.க.ஸ்டாலின்
    [9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: நேபாளம் : காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் மர்ம பொருள் கண்டெடுப்பு
  • கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் வெடிகுண்டா அல்லது வேறு எதுவுமா என்பது குறித்து ராணுவம் சோதனை..
    [9/21, 11:53 AM] விண்மீண்நியூஸ்2: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 33 லட்சம் மதிப்பிலான உடல் கட்டமைப்புக்கான மருந்து, மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
    [9/21, 11:54 AM] விண்மீண்நியூஸ்2: ?♨ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும்- கலெக்டர் தகவல்


[9/21, 11:54 AM] விண்மீண்நியூஸ்2: ?♨முதலியார்பேட்டை அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த 3 பேருக்கு வலைவீச்சு

புதுச்சேரி:

முதலியார்பேட்டை அவ்வை நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 41). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சிவசக்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பிரபாவதி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு பிரபாவதி தனது மகள்களுடன் வீட்டில் இருந்தார். அப்போது லாஸ்பேட்டை அரசு ஊழியர் உதயகுமார் என்பவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் பிரபாவதியின் வீட்டுக்கு வந்தார். அப்போது பிரபாவதியை தகாத வார்த்தைகளால் திட்டிய உதயகுமார் உனது மகளை என்னுடன் அனுப்ப மாட்டாயா? என்று கூறி சரமாரியாக தாக்கினார்.

மேலும் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததோடு பிரபாவதியின் வயிற்றில் காலால் உதைத்தார். பின்னர் உதயகுமார் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பிரபாவதி புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.


[9/21, 11:54 AM] விண்மீண்நியூஸ்2: ?♨பிரான்சிடமிருந்து முதல் ரபேல் விமானத்தை முறைப்படி இந்தியா பெற்றுக்கொண்டது. பிரான்சில் நடந்த நிகழ்ச்சியில் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து முதல் விமானத்தை விமானப்படை தலைமை தளபதி பெற்றுக் கொண்டார்.

【♨】?
[9/21, 11:54 AM] விண்மீண்நியூஸ்2: ?♨மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளின் போராட்டம் நியாயமானது. எனவே விவசாயிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கும். .
[9/21, 11:54 AM] விண்மீண்நியூஸ்2:

ஆட்டோ மொபைல் துறையில் பணியிழப்பு ஏற்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மின்சார வாகன தொழிற்சாலையில் பணியமர்த்தப்படுவார்கள்

தமிழக அமைச்சர் அமைச்சர் நிலோபர் கபில்

•┈┈• ❀ ? winmeennews ?❀ •┈┈•
[9/21, 11:54 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ winmeennews.com?❀•┈┈•

குஜராத் மாநிலத்தில் சர்வதேச அருங்காட்சியகம் அமைப்பதை போல கீழடியிலும் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

•┈┈• ❀ ?winmeennews.com?❀ •┈┈•

advertisement by google

Related Articles

Back to top button