இந்தியாதமிழகம்

பாஜகவின் பாராட்டுமழையில் மு.க.ஸ்டாலின்

advertisement by google

விண்மீன் விரைவு செய்திகள்.
சென்னை: எப்போதும் இதுபோல ஆக்கபூர்வமாக செயல்படுங்கள் .பாஜக வின் பாராட்டு மழையில் திமுக தலைவர் ஸ்டாலின்.

advertisement by google

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.
இந்த விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் இதில் கலந்து கொள்வது இன்னும் உறுதியாகவில்லை.
தேசம் வேறுவேறானாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே.. சீன அதிபரே வருக.. ஸ்டாலின்

advertisement by google

இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்போது இது தொடர்பாக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகம் வரும் செஞ்சீன அதிபர் மேதகு ஜி ஜின்பிங் அவர்களை ‘வருக, வருக’ என மனமார வரவேற்கிறோம். இந்தியத் திருநாட்டைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டது சீனா.

advertisement by google

அதிக மக்கள்
மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் மேன்மைமிகு அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் அவர்கள் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன், என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

ஸ்டாலின் என்ன
இந்த நிலையில் இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வார். அதற்கான கிரீன் சிக்னல்தான் இந்த அறிக்கை. அவர் கண்டிப்பாக விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
பாஜக டிவிட்

advertisement by google

பாஜக டிவிட்
ஸ்டாலினின் இந்த அறிக்கையை தற்போது தமிழக பாஜக வரவேற்று டிவிட் செய்துள்ளது. அதில், ”பிரதமர் மோடியையும் சீன அதிபரையும் வரவேற்கும் மு.க ஸ்டாலினுக்கு நன்றி.என்றும் இதுபோல் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் தமிழகத்துக்கு நன்மையே பயக்கும், என்று குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button