சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து தள்ளிய கருணாஸ் எம்.எல்.ஏ.?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமியை புகழ்ந்து தள்ளிய எம்.எல்.ஏ.
தமிழக சட்டப்பேரவையின் இன்று கடைசி கூட்டத்தொடரில், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் உரை நிகழ்த்தினார். அப்போது, 4 ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளை, சாதனைகளாக மாற்றி சரித்திரத்தில் இடம் பிடித்தவர் முதல்வர் பழனிசாமி என்றும், இடர்பாடுகளை சுடராக மாற்றி மக்களுக்கு வெளிச்சம் காட்டியவர் எனவும் அவர் புகழாரம் சூட்டினார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் சாமி, அரியர் மாணவர்களின் அரசன் முதல்வர் என கருணாஸ் பெருமையுடன் கூறினார். கட்சியில் அடிப்படை தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்த எளிமையான முதலமைச்சர் எடப்பாடியார் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், 40 ஆண்டு அத்திவரதரையும் பார்த்துவிட்டீர், நாற்றங்காலும் நட்டு விட்டீர்கள் என்று முதல்வரை எம்எல்ஏ கருணாஸ் புகழ்ந்து தள்ளினார்.
அரசியல் சூழ்ச்சி குழு
கொரோனா ஊரடங்கால் மார்ச் 24ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், செமஸ்டர் தேர்வுகளில் ஆல்பாஸ் செய்ததோடு, அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.