இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நாட்டுவெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம் உடலுக்கு மலர் வளையம் வைத்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த
காவலர் சுப்பிரமணியம் உடலுக்கு மலர் வளையம் வைத்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை
மரியாதை

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையில் வல்லநாடு அருகே கொலை
குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த
காவலர் சுப்பிரமணியம் தமிழக காவல்துறை இயக்குநர்
ஜெ.கே.திரிபாதி, தென்மண்டல சரக காவல் துறை தலைவர்
முருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,
மற்றும் காவல்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து
மரியாதை செலுத்தினர்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த ஆழ்வார்திருநகரி காவல்
நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் சுப்பிரமணியம் வல்லநாடு
அருகே கொலை குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பணி மேற்கொள்ளும்போது ஏற்பட்ட
இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தில் உயிரிழந்த சுப்பிரமணியம் குடும்பத்தினருக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலையும்,
அனுதாபத்தையும் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக
ரூ.50 லட்சம் வழங்கவும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில்
அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். அவரது உடல் திருநெல்வேலி
அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரான
தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக காவல் துறை இயக்குநர்
ஜெ.கே.திரிபாதி. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன்
ஆகியோர் பங்கேற்றனர்.

advertisement by google

✍தென்மண்டல சரக காவல்துறை தலைவர்
முருகன், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் மோ.டமோர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், ஆகியோர் உடலை சுமந்து வந்தனர்.
அவரது உடலுக்கு தமிழக காவல் துறை இயக்குநர் ஜெ.கே.திரிபாதி, தென்மண்டல சரக காவல் துறை தலைவர் முருகன், மாவட்ட
ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி மாநகர காவல்
ஆணையர் த
தீபக்.மோ.டமோர். தென்மண்டல சரக காவல் துணை
தலைவர் அபினவ்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஜெயகுமார் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
சுதாகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, வட்டாட்சியர்
அற்புதமணி மற்றும் காவல்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்
வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து காவல் துறையின் சார்பில் 21 குண்டுகள் முழங்க காவல் துறை
மரியாதை செலுத்தப்பட்டது.

advertisement by google

✍பின்னர் தமிழக காவல் துறை இயக்குநர்
ஜெ.கே.திரிபாதி, மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம்
அவர்களின் துணைவியார் புவனேஸ்வரி, தந்தை பெரியசாமி மற்றும்
உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் காவலர் குடும்பத்திற்கு அரசின்
சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன்,
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்
மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று அவரது
மனைவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் சுப்பிரமணியம்
குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button