கிரைம்

சீருடை அணிந்த பள்ளி மாணவிக்கு சிதம்பரம் பஸ் ஸ்டேண்ட் அருகில் தாலி கட்டிய மாணவன்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுண்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டுகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து நாம் பல்வேறு பகுதிகளில் விசாரணை செய்ததில் சிதம்பரம் அருகே உள்ள ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் மாணவன் என்பதும் தெரிய வந்துள்ளது.

advertisement by google

சமூக நலன் கருதி பள்ளி வகுப்பறையில் மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் காட்சிகளை சினிமாவில் கூட எடுக்கப்படுவதில்லை. ஆனால், தற்போதைய சினிமாக்களில் அது மட்டும்தான் இல்லை. பள்ளி மாணவர்களின் க்ரூப் ஸ்டெடி போன்ற காட்சிகளில் நிச்சயம் ஒரு லவ் ஸ்டோரியை திணித்து விடுகின்றனர். எல்லை மீறும் காட்சிகளை ரொமான்டிக்காக எடுப்பதால் பதின் வயது பிள்ளைகளின் தடம் மாறிவிடுகிறது. அதுவும் தற்போதைய இன்ஸ்ட்டா உலகத்தில் பெயர் தெரியாத நபருக்கு தன்னை பற்றிய தகவல்களை சொல்லுமளவுக்கு பிள்ளைகள் இன்னும் வெகுளிகளாக இருக்கின்றனர்.

advertisement by google

பள்ளி படிக்கும் போதே ஆளுக்கு ஒரு ‘க்ரஷ்’, செல்போன் சேட்டிங் என்று பல பிள்ளைகளின் தடம் மாறிவிட்டது. வேறு வழியின்றிதான் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பிள்ளைகளின் கையில் செல்போன் கொடுக்கப்பட்டது. அதுவே இப்போது எமனாக மாறியுள்ளது. பெற்றோர் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கலாம் ஆனால் அதுவே முள் கிரீடமாக மாறினால் எதுவும் நடக்கலாம். அந்த வகையில் பஸ் ஸ்டேண்டில் வைத்து பள்ளி மாணவிக்கு மாணவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் வாழ்க்கை குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் உடனடியாக இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button