இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

மருந்தே இல்லையே.. கொரோனாவுக்கு? பாதித்தவர்களுக்கு அப்படி என்ன பிரமிப்புவூட்டும் சிகிச்சை முறைகள் வழங்கப்படுகிறது? முழு விளக்கம். முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

மருந்தே இல்லையே.. கொரோனா பாதித்தவர்களுக்கு அப்படி என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது? முழு விளக்கம்.

advertisement by google

சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் எந்த மாதிரி சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து, பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும். மேலும், சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாலும், இந்த சந்தேகங்கள் மக்களிடம் அதிகம் உள்ளது.

advertisement by google

கொரோனாவிற்கு மருந்தே இல்லையே. மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயமும் பலருக்கு இருக்கிறது.
இதுகுறித்து, மதுரை அப்பல்லோ மருத்துவமனையின், நுரையீரல் சிச்சை நிபுணர் டாக்டர். நர்த்தனன் மதிசெல்வன் ஒரு விளக்கத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பாருங்கள்:

advertisement by google

நேரடியான மருந்து இல்லை
கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை.
அப்படியானால் கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன?

advertisement by google

சளி வெளியேற மருந்துகள்
அதீத காய்ச்சல் இருந்தால் அதைக் குறைக்க மருந்துகள், சளி இருந்தால் அது வெளியேற மருந்துகள், நுரையீரலுக்காக பிஸியோதெரப்பி, வாய்வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் சலைன், க்ளூக்கோஸ் போன்றவை ஏற்றுதல், கொரோனா நுரையீரலைப் பாதிப்பதால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கும். அதற்காக ஆக்ஸிஜன் கொடுக்கப்படும்.

advertisement by google

ஆக்ஸிஜன் அளவு குறையும்
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைந்த அளவுக்குச் சென்றுவிட்டால் வெண்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். சிலருக்கு நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது. அதனால் ரத்த உறைவைத் தடுக்க ஹெப்பாரின் போன்ற மருந்துகள்.
வெள்ளை அணுக்களிலிருந்து அதீதமாக வெளியேறும் சைட்டோக்கைன் ( Cytokine) என்னும் ரசாயனம் வைரஸைக் கொல்கிறது. ஆனால் சிலருக்கு இது தாறுமாறாகச் சுரந்து ரத்தக் குழாய்களையும், நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் ARDS ( Acute Respiratory Distress Syndrome) எனப்படும் மூச்சுத் தினறல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க methylprednisolone, Infliximab போன்ற மருந்துகளைச் செலுத்த வேண்டும்.

advertisement by google

ஆண்டிபயாட்டிக் மருந்துகள்
சிலருக்குச் சிறுநீரக பாதுப்பு ஏற்படக் கூடும் . அவர்களுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை. இதயத்தின் சுவர்களில் வைரஸ் பாதிப்பால் இருதயத் துடிப்பு தாறுமாறாக இருந்தால் அதைச் சரிசெய்யும் சிகிச்சை. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை சீராக இல்லையென்றால் அவற்றைச் சீர் செய்யச் சிகிச்சை. HCQS (Hdroxy chloroquine) போன்று கொரோனாவைக் கொல்வதாகச் சில ஆய்வுகளில் கண்டறியப்பட்ட மருந்துகளைப் பரிட்சார்த்த முறையில் பயன்படுத்துவது. நுரையீரலில் வேறு பாக்டீரியாக்கால் எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆகவே அதற்கான ஆண்டிபயாட்டிக் மருந்துகள். பொதுவாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள் , ( கபசுரக் குடிநீர் போன்றவையும் இதில் அடங்கும்)

advertisement by google

பரிசோதனைகள்
இந்தப் பாதிப்புகளையெல்லாம் கண்டறிந்து சிகிச்சை செய்ய அடிக்கடிக் கீழ்கண்ட பரிசோதனைகள் எடுக்க வேண்டும். அவை: நோயாளியின் உடல் வெப்பநிலை ரத்தத் துடிப்பு , ரத்த அழுத்தம், ரத்த ஆக்ஸிசன் அளவு( Pulse oximeter என்ற கருவி மூலம் விரல் நுனியில் அளக்கலாம்). சாதாரண நோயாளிகளுக்கு நான்கு அல்லது எட்டு மணிநேரத்துக்கு ஒருமுறையும், தீவிர நோயாளிகளுக்குத் தேவைப்பட்டால் தொடர்ச்சியாகவும் பார்க்க வேண்டும்

இத்தனை விஷயங்கள்
வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை, யூரியா, க்ரியாட்டினின், கல்லீருக்கான என்ஸைம்கள் போன்ற ரத்தப் பரிசோதனைகள், ரத்தக் குழாய் உறைவை அறிய D – Dimer என்ற ரத்தப் பரிசோதனை, நுரையீரலில் நிமோனியா பாதிப்பை அறிய எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள், ஈ.சி.ஜி , எக்கோ போன்ற இருதயத்துக்கான பரிசோதனைகள், மூக்கில் அல்லது தொண்டையில் உள்ள நீரில் கொரோனா கிருமியைக் கண்டறியும் Nasal or Throat swab, ரத்தத்தில் அமிலத் தன்மை , ஆக்ஸிஜன் , கார்பன் மோனாக்ஸைட் (Arterial Blood gas )- வெண்டிலேட்டரில் இருக்கும். இவ்வாறு டாக்டர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button