உலக செய்திகள்கல்விபயனுள்ள தகவல்வரலாறுவிவசாயம்

வெட்டுக்கிளியை உணவாக உட்கொள்ளும் கரிச்சான் குருவி மற்றும் செங்கால் நாரை?முழு விவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!!

advertisement by google

வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது… ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்…

advertisement by google

இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.

advertisement by google

ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

advertisement by google

வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது.

advertisement by google

இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்… அவன் தான் கரிச்சான் குருவி…

advertisement by google

இவனுக்கு மாட்டுக்காரன், இரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

advertisement by google

கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில் ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு ‘கிளைடர்’ விமானம் போல பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் ‘பூமரேங்’ என்னும் ஆயுதம் போல.

இவர்களை மின் கம்பிகள், விளக்குக் கம்பங்கள் இவற்றின் மீதும் பார்க்கலாம். அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவதைக் காண முடியும். இதுவும் அவை தன் உணவை அடையும் பொருட்டே.

இவர்களுக்கு பயம் என்பதே துளியும் கிடையாது. இவர்கள் தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டுகிறார்கள். அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று. King crow என்ற பெயர் வரக் காரணமும் இதுவே.

சில பறவைகள் தங்களது சிறகுகளில் பேன் போன்ற சிறு பூச்சிகள் சேராமல் தடுக்க ஒரு உத்தியினைக் கையாளும். அவை எறும்புப் புற்றின்மீது சென்றமரும். அப்போது அவற்றின் மீது ஏறும் எறும்புகள் வெளியிடும் ஃபார்மிக் அமிலத்தில் பேன்கள் இறந்து விடுகின்றன. இவர்களும் அப்படி தான்…

இவர்களின் அருமை இன்று புரிகிறதா…
உணவு சங்கிலியில் ஒரு சங்கிலி அழிக்கப்படுவதின் விளைவுகளை இன்று உணர்கின்றது இந்த மனித இனம்…

பாருங்கள் இன்னும் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க காத்திருக்கிறது இந்த மதிக்கெட்ட மனித சமுதாயம்…

கரிச்சான் மட்டுமல்ல… அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்போம் இல்லையேல் இப்படியே மனித இனத்தின் அழிவை பார்த்து ரசிப்போமாக…

பறவைகளை பாதுகாப்போம்!
இயற்கைக்கு புத்துயிர் ஊட்டுவோம்!!
மனித இனத்தை பேரழிவில் இருந்து காப்போம்…!!!

உயிரினங்களிடம்_உறவுகொள்

செங்கால்நாரை, #கரிச்சான்குருவி ஆகிய இரு பறவைகள்தான் வெட்டுக்கிளிக்கு மிகப் பெரிய எதிரி…

ஒரு ஆயிரம் பறவை இருந்தால் போதும்..

ஒரு லட்சம் வெட்டுக்கிளியை மறைய செய்யும்.

அப்பறவைக்கான உணவே வெட்டுக்கிளிதான்.

இப்பறவைகளின் ஓசை கேட்டாலே வெட்டுக்கிளி அந்த இடத்திற்கு வராது.

பறவைஇனத்தைநாம்காப்பாற்றினால்

மனிதஇனத்தைபறவைகாக்கும்…

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button