இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

கோவில்பட்டியில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் குழந்தைக்கு யாழினி என பெயர் வைத்த கனிமொழி எம்.பி? முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் குழந்தைக்கு பெயர் வைத்த கனிமொழி எம்.பி

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் 1வது வார்டு பகுதியில் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் முககவசம் ஆகியவற்றை வழங்கினர். பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு பொருள்களை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கனகராஜ் – மாரிசித்ரா தம்பதியினர் தங்களுக்கு பிறந்துள்ள பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. அந்த தம்பதியின் வீட்டிற்கு முன் சென்ற அவர் சமூக இடைவெளி விட்டு நின்று, குழந்தையின் தாய் மாரிசித்ராவிடம் நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து குழந்தைக்கு யாழினி என்று பெயர் சூட்டினார்.

advertisement by google

இந்நிகழ்ச்சியில் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, புதூர் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆர். ராதா கிருஷ்ணன், கோவில்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் லெனின்,திமுக நிர்வாகிகள் பரமசிவம், கல்லடி வீரன், ராமமூர்த்தி, குமார், மைக்கேல் ராஜா. சின்னப்பர். முருகேசன் மாரிமுத்து, பிச்சை, ராமர், ராமச்சந்திரன், முத்துவேல், தேவ கிருபை, மகேஷ், மயில் ராஜ், தம்பிராஜன். அருள் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button