பீடி வாங்கும் போது உண்டான சண்டையில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஜெயஸ்ரீ சிறுமி – யை கொன்றோம் என்று முருகன், கலியபெருமாள் காமெடி வாக்குமூலம்?முழு விவரம் – விண்மீன்நியூஸ்

ஜெயஸ்ரீ, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஜெயஸ்ரீ மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வருகிறது. அதில், கடந்த சனிக்கிழமை இரவு சிறுமியின் தந்தை ஜெயபால் கடைக்குப் பீடி வாங்க வந்த பிரவீன்குமார் ஜெயபாலின் பெரிய‌ மகனைத் தாக்கியுள்ளார். இந்தப் பிரச்சனை எங்களால் என நினைத்த ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே எங்கள் மீது புகார் கொடுக்கச் செல்கிறாயா என்ற கோபத்தில் ஜெயபால் வீட்டிற்குச் சென்றபோது கடையில் சிறுமி ஜெயஸ்ரீ இருந்தாள். இந்தச் சிறுமி இதற்கு முன்பு எங்களுக்கு இடையே நடக்கும் சண்டையின் போது அதிகமாக வாய்ப் பேசுவாள். அதனால் தான் அந்தச் சிறுமியின் வாயடைத்துக் கட்டிப்போட்டு எரித்துவிட்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.

இணையத்தில் பகிர