பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்முறை விளக்கம் ?முழுவிளக்கம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி!

advertisement by google

இறைவனின் அருளைப் பெறவேண்டி நோன்பிருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரம்ஜான் பண்டிகை மிக முக்கியமானது. இந்த ரமலான் மாதத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை நாமும் செய்து அசத்தலாம். இந்தப் பிரியாணியை மண் சட்டியில் செய்தால் கூடுதல் சுவையைத் தரும்.

advertisement by google

என்ன தேவை?

advertisement by google

மட்டன் – ஒரு கிலோ

advertisement by google

பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ

advertisement by google

எண்ணெய் – 100 கிராம்

advertisement by google

நெய் – 150 கிராம்

advertisement by google

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 5

ஏலக்காய் – 3

வெங்காயம் – அரை கிலோ (நறுக்கவும்)

தக்காளி – அரை கிலோ (நறுக்கவும்)

இஞ்சி – பூண்டு விழுது – தேவையான அளவு

கொத்தமல்லி – ஒரு கட்டு

புதினா – ஒரு கட்டு

மிளகாய் – 8

தயிர் – 225 கிராம்

மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்

மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு

எலுமிச்சைப் பழம் – ஒன்று

எப்படிச் செய்வது?

முதலில் அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து விடவும். பிறகு மண் சட்டியை அடுப்பில்வைத்து எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி விடவும். பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறியதும் மூடி போட்டு மூடியே வைக்கவும். சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து, பிறகு கொத்தமல்லி, புதினாவைப் போட்டு கிளறவும். பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் போடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு வேகவிடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனைச் சேர்த்துத் தீயை அதிகப்படுத்தி நன்றாக ஐந்து நிமிடங்கள் கிளறவும். பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளமாக எண்ணெய் மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசி கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெயும் எலுமிச்சைப் பழத்தைப் பிழியவும். வெந்ததும் முக்கால் பதத்தில் வடிக்கவும். இதை கிரேவியில் கொட்டவும். கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து ஒருமுறை கிளறி மூடி வைக்கவும். பிறகு இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு மறுபடியும் 15 நிமிடங்கள் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

advertisement by google

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button