உலக செய்திகள்

இலங்கையில்அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதற்காக இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கூறி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு, பொதுமக்கள் ஆதரவு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

advertisement by google

கொழும்பு: அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதற்காக இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கூறி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

advertisement by google

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகக்கோரி போராட்டம் நடந்தது. அப்போது, மக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு மக்களும் பதிலடி கொடுக்க போராட்டம் வன்முறையாக மாறியது. மகிந்த உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனையடுத்து மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், மகிந்த ராஜபக்சே, அவரது மகன் நமல் உள்ளிட்ட சிலர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

இந்நிலையில், டெம்பிள் ட்ரீஸ் மற்றும் கலே பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சதித்திட்டம் தீட்டி குற்றச்செயலில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய குற்றப்பிரிவு விசாரணை துறைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button