சென்னை அம்பத்தூரில் ,15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கள்ளக்காதலனுடன் தாய் கைது*✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கள்ளக்காதலனுடன் தாய் கைது*

ஆவடி: அம்பத்தூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். மேலும் உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார். கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் பிரியங்கா (37). இவரது கணவர் நரேஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுக்கு முன்பு பிரிந்தார். பின்னர், அவர் தனது 15 வயது மகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அம்பத்தூர், திருவேங்கட நகர், 2வது மெயின் ரோட்டை சேர்ந்த சந்தீப் (37) என்ற நண்பருடன் பிரியங்காவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதன் பிறகு, இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்தீப், பிரியங்காவின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தெரிந்தும் பிரியங்கா உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமிக்கு சந்தீப் பாலியல் தொல்லை கொடுத்ததும், தாய் பிரியங்காவும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாய் பிரியங்கா மற்றும் கள்ளக்காதலன் சந்தீப் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *