நடிகை, பின்னணி பாடகி ஸ்ருதிஹாசனிடம் ,ஃபோன் நம்பர் கேட்ட ரசிகர்கள்…✍️ லைக்கை அள்ளும் ஸ்ருதியின் நச்சு பதில்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

ஃபோன் நம்பர் கேட்ட ரசிகர்… லைக்கை அள்ளும் ஸ்ருதியின் நச்சு பதில்

சென்னை : நடிகை, பின்னணி பாடகி என தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் பிரபலமாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி, ஹே ராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து நடிகையானவர்.

பாலிவுட்டில் லக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி, தமிழில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் நடித்த 3, விஷாலுடன் பூஜை, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம் போன்ற படங்களில் நடித்து டாப் ஹீரோயின் ஆகினார்.

சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த லாபம் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகி வரும் Salaar படத்தில் பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். மியூசிக் வீடியோக்களிலும் பணியாற்றி வருகிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவான ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிராமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரை சோஷியல் மீடியாவில் பின்தொடர்வோர் அதிகம்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஸ்ருதியிடம் ட்விட்டரில், உங்கள் போன் நம்பர் தாருங்கள் என கேட்டுள்ளார். இதற்கு, 100 என நக்கலாக பதிலளித்துள்ளார் ஸ்ருதி. இதனை பார்த்து விட்டு பலரும் விழுந்து , விழுந்து சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டு பதிவிட்டு கமெண்ட் பகுதியை நிரப்பி வருகின்றனர். இன்னும் சிலர் நீங்கள் போலீசில் இருக்குறீர்களா என்று வேறு கிண்டலாக கேட்டுள்ளனர்.

இன்னும் சிலர் சரியான பதில் என ஸ்ருதியை பாராட்டி வருகின்றனர். ஸ்ருதியின் இந்த பதிலை பலரும் லைக் செய்து, ரீட்வீட் செய்து வருகின்றனர். கமெண்ட்களையும் குவித்து வருகிறார்கள்.

கடந்த ஓராண்டாக காதலருடன் மும்பையில் வசித்து வந்த ஸ்ருதிஹாசன், திடீரென அவருடனான உறவை சமீபத்தில் முறித்துக் கொண்டுள்ளார். சோஷியல் மீடியாவில், தனது காதலருடன் நெருக்கமாக இருப்பது போன்று பதிவிட்ட ஃபோட்டோக்களையும் ஸ்ருதிஹாசன் நீக்கி உள்ளார்.அதற்கு பிறகு ஸ்ருதி பற்றிய பெரிதாக எந்த தகவலும் வெளியே வரவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில், செம கிளாமர் உடையில் வந்து கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருக்கு போட்டியாக இவரின் தங்கை அக்ஷரா ஹாசனும் கிளாமர் உடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கிட்டதட்ட ஓராண்டாக தாங்கள் பார்த்துக் கொள்ளவே இல்லை. மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த விருது வழங்கும் விழா தனக்கு ஸ்பெஷல் என மிக உருக்கமான, எமோஷனல் போஸ்ட் ஒன்றை தங்கையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பதிவிட்டிருந்தார் ஸ்ருதிஹாசன்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *