t

சிக்கியபுதையல் துரத்திவந்த துரதிர்ஷ்டம்? இப்போது சிறையில் பெண்போலீசார்

advertisement by google

விண்மீன் விரைவு செய்திகள்.
தேவிக்கு பணம் மீது அவ்ளோ ஆசை.. சிக்கிய தங்க புதையல்.. துரத்தி வந்த துரதிர்ஷ்டம்.. இப்போது சிறையில்!

advertisement by google

குமரி: தேவிக்கு பணத்து மேல அவ்ளோ ஆசை.. ஒரே நாளில் குறுக்கு வழியில் உள்ளே புகுந்து டாப்-கியரில் மேல வந்துவிடலாம் என்று பார்த்தார்.. தங்க புதையலுக்கு அலையோ அலை என்று அலைந்தார்.. கடைசியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்.. இந்த தேவி ஒரு பெண் போலீஸ்!

advertisement by google

குமாி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளத்தை சேர்ந்தவர் ஜொ்லின். 24 வயதான இவர் ஒரு ஜேசிபி டிரைவர் ஆவார். 2 மாசத்துக்கு முன்னாடி ஜெர்லின் 2 சொகுசு கார்கள், 2 பொக்லைன் எந்திரங்களை வாங்கினார்.
அக்கம் பக்கத்தினருக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம்.. ஜெர்லினுக்கு எப்படி இவ்ளோ காசு கிடைத்தது, பெரிய பெரிய வண்டி எல்லாம் வாங்கி இருக்காரே.. டிரைவர் வேலையில் இவ்வளவு பணம் வர வாய்ப்பில்லையே என்று சந்தேகம் குடைந்தெடுத்தது.

advertisement by google

அதனால் அவர்கள் நேரிடையாக வந்து எப்படி இவ்ளோ பணம் கிடைத்தது என்று ஜெர்லினிடமே கேட்டு விட்டார்கள். அதற்கு ஜெர்லினோ, புதையல் கிடைச்சது என்றார். இந்த விஷயம், கருங்கல் ஸ்டேஷனில் வேலை பார்த்து வந்த போலீஸ்காரர்கள் ஜோன்ஸ், ரூபின் ஆகியோருக்கு தெரியவந்தது.

advertisement by google

இதனை அதே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பொன் கீதாவிடமும் சொன்னார்கள். இப்போது 3 பேரும் ஜெர்லினை மிரட்டி பணத்தை பிடுங்கலாம் என்று பிளான் பண்ணினார்கள். அதன்படி, ரவுடிகள் உதவியுடன் ஜெர்லினை கடத்தி கொண்டு போய், வள்ளியூாில் ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்தனர். புதையல் எங்கே என்று கேட்டு மிரட்டி அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
ஜெர்லினோ “எனக்கு ஒரு புதையலும் கிடைக்கல.. கடன் வாங்கிதான் கார் வாங்கினேன்” என்று கதறினார். எனினும் இதை நம்பாத அவர்கள், ஒரு வெள்ளை பேப்பரில் ஜெர்லினிடம் கையெழுத்து வாங்கி கொண்டனர். அத்துடன், 2 சொகு சார்கள், 8 பவுன் நகையையும் அபகரித்து கொண்டு துரத்தி விட்டனர்.

advertisement by google

இதையடுத்து, ஜெர்லின் குளச்சல் ஏஎஸ்பி.யிடம் புகார் தந்தார். எனவே இது சம்பந்தமாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்தது. அப்போதுதான், தெரிந்தது 2 போலீசார், மற்றும் பொன்கீதாவும் இப்படித்தான் பல காலமாக அந்த பகுதியில் உள்ள வசதியான வீட்டு நபர்களை மிரட்டி பணத்தை பறித்து வந்துள்ளனர் என்பது.
இதுக்கெல்லாம் ஸ்கெட்ச் போடுவது பொன்கீதா தானாம். விசாரணையில் இதெல்லாம் தெரியவந்ததை அடுத்து, பெண் இன்ஸ்பெக்டா் பொன் கீதா, 2 போலீசார் என 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த மாதிரி பணம் பறிப்பதில், நாகை அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமாா், ஜெரின் ராபி, கிருஷ்ணகுமாா் ஆகியோருக்கும் தொடர்பு என தெரியவந்ததையடுத்து, அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த ஆசிரியருக்கும் பொன்கீதாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் ஆசிரியர் கடத்தலுக்கும் உதவி உள்ளார். ஆனால் பொன்தேவி இப்போது தலைமறைவாக உள்ளார். ஆள் எங்கே என்றே தெரியவில்லை. அதனால், தூத்துக்குடியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அந்த சஸ்பெண்ட் நோட்டீஸை ஒட்டி விட்டு வந்தனர். எனினும் இவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button