வரலாறு

யார் அம்பேத்கர்?உலகம் முழுக்க இவருக்கு சிலை இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இவரின் சிலையைச் சுற்றி இரும்பு வலை இருக்கிறது?இவரை பிடிக்காதவன்கூட.. வழக்கறிஞராக விரும்பினால்.. இவர் இயற்றிய சட்டத்தைத்தான் படித்தாக வேண்டும்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

யா ர் ? அ ம் பே த் க ர்…?…

உலகம் முழுக்க இவருக்கு சிலை இருக்கிறது.
இந்தியாவில் மட்டும்தான்
இவரின் சிலையைச் சுற்றி
இரும்பு வலை இருக்கிறது.

advertisement by google

இவர்.
இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை செய்யப்போன..அன்னல் அல்ல.
வெளிநாட்டில் படித்துவிட்டு
இந்தியாவுக்கு சேவைசெய்யவந்த அன்னல்.

advertisement by google

இவரை பிடிக்காதவன்கூட..
வழக்கறிஞராகவிரும்பினால்..
இவர் இயற்றிய சட்டத்தைத்தான் படித்தாக
வேண்டும்.

advertisement by google

புத்தருக்குப்பிறகு..
இந்துமத சனாதர்மத்துக்கு
எதிராக யுத்தம்செய்த
முதல் சமூகநீதிப்போராளி
இவர் ஒருவர்தான்.

advertisement by google

காந்தி இல்லையென்றாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும்.
இவர் இல்லையென்றால்
எளியமனிதர்களுக்கான சுதந்திரம் கிடைத்திருக்காது.

advertisement by google

இவர் வாங்கிய பட்டங்களை
வானத்தில் பறக்கவிட்டால்..
இந்தியாவே இருட்டாகிவிடும்.

advertisement by google

காந்தியும் வழக்கறிஞர்தான்
நேருவும் வழக்கறிஞர்தான்.
அவர்கள் தங்களின் குடும்பத்துக்காக படித்தார்கள்.
அம்பேத்கர் தான் சார்ந்த
சமூகத்துக்காக படித்தார்.
அதனால்தான்
இந்திய சட்டவடிவை
தனிமனிதனாக எழுதிமுடித்தார்.

advertisement by google

தான்வாழ்ந்த காலத்தில்
தன் அறிவுத்திறனால்.
காந்தியையே கதற
வைத்தார்.
பட்டேலை பதறவைத்தார்.
வெள்ளையனை வியக்கவைத்தார்.

முட்டாளுக்குக்கூட தெரியும்
இவர் அறிவாளியென்று.
ஆனால்,
இவரை ஏற்றுக்கொள்வதற்கு.
நாம் ஏற்றுக்கொண்ட சாதி
தடுக்கிறது.

அதனால்தான் இவரை இந்திய அரசியலமைப்பின் தந்தையென்பதையே
நம் மனம் ஏற்றுக்கொள்ளமறுக்கிறது.

காந்தியை கொல்லும்வரை..
கோட்சேவும் நல்லவன்தான்.
காந்தியை கொல்லத்தூண்டியது.
அவன் பின்பற்றிய மதம்.

நாம் அனைவருமே நல்லவர்கள்தான்.
அம்பேத்கரை ஏற்கமறுப்பது,
நாம் பின்பற்றும் சாதி.

சாதி இல்லையென்று வாதிட்ட
அம்பேத்கர்தான் இன்றும் வாழ்கிறார் நாளையும்வாழ்வார்.
சாதிக்காக போரிட்டவர்கள்
இன்று இல்லை.
சாதிக்காக போரிடும்நாம்
நாளை இருக்கப்போவதுமில்லை.

அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகள்
சாதிகளை தீண்டாதவை.
மனிதகுலத்துக்கு சாதிகள்
வேண்டாதவை.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அம்பேத்கர் நம் வாழ்நாள் முழுக்கநம்மோடு வந்துகொண்டேதான் இருப்பார்.
காலையில் வீட்டைவிட்டு
வெளியேறி மாலையில் வீட்டுக்குத்திரும்பும் வரை..
நம்மை சாதி இயக்கவில்லை அம்பேத்கரின்சட்டம்தான் இயக்குகிறது.

சாலையில் நாம் பயணிக்கும்போது..
இடதுபக்கமா வலதுபக்கமா என்பதைக்கூட அம்பேத்கரின்
சட்டம்தான் தீர்மானிக்கிறது.
நம் சாதி அல்ல,

அலுவலகத்தில் எட்டுமணிநேரத்துக்குமேல் நம்மை வேலை செய்யவிடாமல் தடுப்பதும்.
எக்ஸ்ட்ரா சம்பளத்தை வாங்கிக்கொடுப்பதும்.
அந்த தாழ்த்தப்பட்டவன் எழுதிய சட்டம்தான்.

மனைவியை பிடிக்கவில்லையென்றாலும்..கணவனை இன்ளொரு
திருமணம் செய்யவிடாமல்
நம் சகோதரிகளையும் நம் அம்மாக்களையும் காப்பாற்றிக்கொண்டிருப்பது அம்பேத்கர் இயற்றிய சட்டம்தான் நம் சாதியல்ல.

திருமணத்தின்போது சாதி வந்துவிடும்.
கணவனும் மனைவியும்
கெட்டவடிவில் பிரிய நேர்ந்தால் அம்பேத்கர்தான் சட்டவடிவில்வருவார்
சாதிவராது.

இன்று நாம்
அனைவரும் வாக்களிக்கலாம் என்பதும் அம்பேத்கரின் சட்டம்தான். நாம் அனைவரும் பின்பற்றும் சாதியல்ல.

நம்மால் அம்பேத்கரை சுலபமாக வெறுக்கமுடியும்,
ஆனால்,
நம் அன்றாட வாழ்விலிருந்து அவரை பிரிக்க முடியாது.

நம் முதுகை நம்மால் பார்க்கமுடியாது.
சாதி அபிமானிகளால்
அம்பேத்கரை ஏற்கமுடியாது.

ஒரு தாழ்த்தப்பட்ட குடியிருப்பில்..
எத்தனையோ பேரின் பெயரில்..
காந்தி இருக்கிறார்
காமராஜர் இருக்கிறார்.
ராமன் இருக்கிறார்
ராதாகிருஷ்ணன் இருக்கிறார்
சிதம்பரம் இருக்கிறார்.
சிவஞானம் இருக்கிறார்.

உயர்சாதி குடியிருப்பில் ஒரு அம்பேத்கர்கூட
இருப்பதே இல்லை என்பதில்தான்
இருக்கிறார் அவர் தான் # அம்பேத்கர் …✍??

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button