இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்விளையாட்டு

பெண்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரனாவை தைரியமாக எதிர்கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கும் அதிசயம் எப்படி? நிஜம் என்ன? முழு விபரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

ஆண் – பெண் சமத்துவம் நிறைய பேசினாலும், நிஜத்திலும் யதார்த்தத்திலும் ஒப்பிடும்போது பெண்களுக்கான வாய்ப்புகள் வித்தியாசமானவை……..

advertisement by google

சவால் நிறைந்தவை… ஆனால் சரித்திரம் படைப்பவை..

advertisement by google

அப்படி ஒரு சரித்திரத்தை உலக பெண் தலைவர்கள் வலிய எழுதி கொண்டுள்ளனர்.

advertisement by google

அலட்சியப்படுத்திய மாபெரும் தலைவர்கள் மத்தியில் கொரோனாவை தைரியமாக எதிர்கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கும் வைத்திருக்கிறார்கள் பெண் தலைவர்கள்!!

advertisement by google

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் யாருக்கும் பயத்தை தரவில்லை.. ஒரு சிலர் மரணமடைய ஆரம்பிக்கும்போதும் பீதி கிளம்பவில்லை..

advertisement by google

வூஹான் நகர தெருக்களில் பிணங்கள் கொத்து கொத்தாக விழுவதை பார்த்த பிறகுதான் சிலருக்கு கலக்கம் ஏற்பட தொடங்கியது

advertisement by google

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பரவியபோதும் டிரம்ப் இதை கண்டுகொள்ளவே இல்லை..

advertisement by google

இந்த வைரஸ் ஒரு புரளி என்றார்.. சீனா பரப்பிவிடும் வேலை என்றார்.. அமெரிக்காவிலேயே ஏராளமானோர் உயிரிழந்த நிலையில்தான் கையை பிசைந்து, மண்டை காய்ந்து நிற்கிறார்..

எதுவுமே செய்ய முடியாமல் மற்ற நாடுகளை மிரட்டி உருட்டி, திணறி வைத்து வருகிறார்.

இதே போலதான் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும்.. தான் நேரடியாகவே கொரோனாவால் பாதிக்கப்படும்வரை, கை கொடுப்பதை நிறுத்தவே மாட்டேன் என்று பிடிவாதம் காட்டினார்..

கடைசியில் ஐசியூ வரை சென்று உயிரை கையில் பிடித்து கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.

இப்படி வல்லரசு நாட்டு தலைவர்களே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து மிரண்டு வருகின்றனர்..

ஆனால் இந்த நெருக்கடி சூழலில் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் தைரியமான முடிவுகளை எடுத்து, வைரஸை கட்டுக்குள் வைத்துள்ளனர்…

அதற்கு உதாரணமாக சில பெண் தலைவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் முக்கியமானவர் தைவான் நாட்டு பிரதமர் சாய் இங்-வென்.. இவர், சீனாவில் வைரஸ் பரவியது குறித்து செய்தி வந்த மறுநாளில் இருந்தே தைவானுக்கு வரும் எல்லா விமானங்களுக்கும் தடை விதித்துவிட்டார்..

இப்போது தைவான் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-க்கும் கீழ்தான்.. அது மட்டுமல்ல.. தங்கள் நாட்டை காத்ததுடன், பிற நாடுகளுக்கும் உதவி செய்து வருகிறது தைவான்..

தங்கள் நாட்டுக்கு தேவையான மாஸ்க்குகளை தயார் செய்தது போக, ஐரோப்பிய நாடுகளுக்கும் மாஸ்க்குகளை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

இதற்கடுத்ததாக நியூசிலாந்து… முழுக்க முழுக்க சுற்றுலாவை முக்கிய வருவாய் ஆதாரமாக கொண்ட நாடு…. மலைகளும், அந்த மலை முகட்டில் உருகி வழியும் பனியையும், காண ஆயிரக்கணக்கானோர் இந்த நாட்டுக்கு படையெடுப்பர்.. ஆனால் கொரோனா பரவல் என்ற செய்தி வந்ததுமே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைய தடை போட்டார் அந்த நாட்டின் பிரதமர் ஜசிந்தா.. இப்போது அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1,500-க்கும் குறைவுதான்.. இதற்கு முக்கிய காரணம் ஜசிந்தாவின் சாதுர்யமான முடிவுகள்தான்!!

இவர்களை போலவே ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், ஐஸ்லாந்து, டென்மார்க்… நார்வே நாடுகளிலும் பெண் தலைவர்கள்தான் ஆட்சி செய்து வருகிறார்கள்..

எந்த முடிவுகளையும் எடுக்க தயக்கம் காட்டுவதில்லை.. தள்ளி போடுவதில்லை.. பின் வாங்குவதில்லை.. மக்களை காக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதிரடியை அந்த கணமே அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் தினந்தோறும் ஏற்படும் உயிரிழப்புகளையும், புள்ளி விவரங்களையும் கண்டு அஞ்சுவதில்லை.. இக்கட்டான சூழ்நிலையே என்றாலும், பயமின்றி, பதற்றமின்றி அதே சமயம் சரியான முடிவுகளை இந்த பெண் பிரதமர்கள் எடுத்து வருகின்றனர்..

தங்கள் மக்களையும் சரியாக வழிநடத்தி வருகின்றனர்!! உண்மையில் இன்று விழிபிதுங்கி கிடக்கும் வல்லரசுகள் இந்த பெண் பிரதமர்களின் நாடுகளையும், அவைகள் கடைபிடிக்கும் வழிமுறைகளையும் சற்று திரும்பி பார்க்க வேண்டும்..

நல்ல விஷயத்தை எங்கு, யாரிடம் கற்று கொண்டாலும் அது பாடம்தான்!! பெண்களின் இந்த திறனுக்கு இயற்கையாகவே அவர்களிடம் பொதிந்துள்ள மனோபலமும் ஒரு காரணம்… இயல்பிலேயே மன தைரியம் உள்ளவர்கள்.. பார்ப்பதற்கு ஆண்களே பலசாலிகளாக காணப்பட்டாலும்.. இதுபோன்ற அபாயங்களை பெண்களே ஈஸியாக எதிர்கொண்டு அசால்ட்டாக கடக்கிறார்கள்.

ஆனால் உலகின் முக்கிய முடிவுகளை 25 சதவீதம் மட்டுமே பெண் தலைவர்கள் எடுப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.. இந்நிலை மாற வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.. இனியும் சதைகளின் வாயிலாக, பாலினம் வாயிலாக, பெண் என்ற மனோபாவத்தை முடக்குவது கூடாது.. சமூகத்தை தூக்கி பிடிக்கும் சரி பாதியானவர்கள் பெண்கள் என்பதை இன்றைய உலக பெண் பிரதமர்கள் வல்லரசுகளுக்கே நிரூபித்து வருகின்றனர்…

அத்துடன் அனைத்து கர்ண கொடூர வைரஸையும் ஓட ஓட விரட்டி மாஸ் காட்டி வருகின்றனர்

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button