உலக செய்திகள்

பன்றிக்காய்ச்சல் எதிரொலி ,4ஆயிரம் பன்றிக்குட்டிகளை உயிருடன் புதைக்க தென் கொரியஅரசு முடிவு

advertisement by google

?♨தென் கொரியாவில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுகிறது : 4 ஆயிரம் பன்றிக்குட்டிகளை உயிருடன் புதைக்க அரசு முடிவு

advertisement by google

சியோல் : வீட்டு விலங்குகளை அபாயகரமாக தாக்கக் கூடிய தொற்றுநோய்களில் ஒன்றான ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் தென் கொரியாவில் பரவி இருக்கிறது உறுதி ஆகியுள்ளது. ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதால் தென் கொரியாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வட கொரியா நாட்டில் இருந்து கியோங்கி மாகாணம்  பஜு நகர் வழியாக தென் கொரியாவிற்கு பரவி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனை தென் கொரியாவின் வேளாண்மை, உணவு மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் கிம் ஹியோன்-சூ உறுதி செய்துள்ளார்.

advertisement by google

இந்நிலையில் உச்சக்கட்ட எச்சரிக்கையின் ஒரு பகுதியாக 4000 பன்றிக் குட்டிகளை உயிருடன் புதைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் தாக்கக் கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும்.தென் கொரியாவில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.முன்னதாக சீனாவில் ஆப்ரிக்க பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முக்கால்வாசி பன்றிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகின.ச பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 கோடிக்கும் அதிகமான பன்றிகள் பலியானதையடுத்து, அவசர காலத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட பன்றி இறைச்சியை சீன அரசு விடுவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button