இந்தியாஉலக செய்திகள்கிரைம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

நட்பாக பழகி பிளாக் மெயில் செய்பவர்களை சைபர் கிரைமில் எப்படி ரகசியமாக புகாரளிக்கலாம்?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகி பின் பிளாக் மெயில் செய்பவர்களைப் பற்றி எப்படி ரகசியமாக புகார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

advertisement by google

1 ) சைபர் கிரைம் என்றால் என்ன ?

advertisement by google

இணையம் வாயிலாக செய்யப்படும் குற்றங்கள் அனைத்தும் சைபர் கிரைம் எனப்படும் .

advertisement by google

2 ) சைபர் புகார் எங்கே கொடுக்கலாம் ?

advertisement by google

புகார்களை தெரிவிக்க CID துறை , இந்தியாவின் பிரதானமான மாநிலங்களில் சைபர் கிரைம் பிரிவை (cyber crime cell ) செயல்படுத்துகிறது . தகவல் தொழில்நுட்ப உரிமை சட்டப்படி நம் மாநிலத்தில் உள்ள பிரிவில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை . இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் சைபர் கிரைம் பிரிவிலும் புகார் கொடுக்கலாம் .

advertisement by google

3 ) புகாரை எப்படி அளிப்பது ?

advertisement by google

2 வழிகளில் புகார் அளிக்கலாம் . எழுத்துப்பூர்வமாகவும் , இணையதளம் ( ஆன்லைன் ) மூலமாகவும் புகார் அளிக்கலாம் .

advertisement by google

தங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் மாநிலத்திலோ அல்லது பிற மாநிலங்களிலோ உள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு தங்கள் பெயர் , அஞ்சல் முகவரி , தொலைபேசி எண்ணுடன் உங்கள் புகாரை எழுத்துப்பூர்வமாக அதன் தலைமை நபருக்கு அனுப்பலாம் . ( Address the complaint to the Head of the cyber crime cell )

தமிழகத்திற்கும் , சென்னைக்கும் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு முகவரி கீழே கொடுத்துள்ளேன் .

Chennai
Address:
Asst. Commr. of Police,
Cyber Crimes Cell,
Vepery, Chennai 7
Contact Details: 04423452348
04423452350
E-mail id: cybercrimechn@yahoo.com

For Rest of Tamil Nadu
Address: A-Wing, III rd Floor,
Rajaji Bhawan, Besant Nagar,
Chennai-600090
ph: 044-24461959
24468889
24463888
E-mail id: hobeochn@cbi.gov.in

ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க கீழே கொடுக்கும் லிங்க் ( link ) சென்று அதில் பதிவு ( register ) செய்து தங்கள் ஊரை தேர்வு செய்து அதன் மூலமாக புகார் அளிக்கலாம் .

https://cybercrime.gov.in

புகார் கொடுக்கும்போது சமர்ப்பிக்க வேண்டிய தகுந்த ஆதாரங்களையும் திரட்டி கொள்ளுங்கள் .

உதாரணத்திற்கு பிளாக் மெயில் செய்யும் நபர் தங்களிடம் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு செய்தது , குறுந்தகவல் , மெயில் போன்று ஏதேனும் அனுப்பியிருந்தால் அதை புகாருடன் சேர்த்து அனுப்புங்கள் . அது தங்களுக்கு நீதி கிடைக்க பெரும் உதவியாக இருக்கும் .

குறிப்பு : உள்ளூர் காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு புகார் கொடுக்கலாம் . அங்கு எல்லா வகையான புகார்களும் ஏற்றுக்கொள்ளப்படுமா என தெரியவில்லை .

சைபர் கிரைம் மூலமாக நாம் கொடுக்கும் புகார்களை ரகசியமாக பாதுகாப்பார்கள் .

பிளாக் மெயில் செய்யும் நபர்களுக்கு நம் பலவீனம்தான் பலமே !

நாம் தவறு ஏதும் செய்யாத பட்சத்தில் வீட்டுக்கு தெரிந்தே புகார் கொடுக்கலாம் .

நாம் தவறே செய்திருந்தாலும் ( தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை ) நம் குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் நமக்கு ஆதரவு அளிப்பார்கள் . கொஞ்சம் திட்டும் அடியும்தான் கிடைக்கும் .

தவறு செய்ததற்காக அதை கூட நாம் தாங்கிக்கொள்ள மாட்டோமா ? ஆனால் அதற்காக பயந்து நம் பயம்தான் சமூக வலைதள விஷகிருமிகளுக்கு பலம் .

பெண்கள் தைரியமாக இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் . இல்லை என்றால் அந்த விஷகிருமி இன்னும் பல தவறுகளை செய்யும் . அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

advertisement by google

Related Articles

Back to top button