இந்தியாஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

எச்.ஐ.வி வைரஸ் போல்தான் கொரோனா வைரஸ்? அழிக்கவே முடியாமல் கூட போகலாம்? லாக்டவுன் தேவை? உலக சுகாதார மையம் எச்சரிக்கை?முழுவிவரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

கொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. லாக்டவுன் தேவை WHO எச்சரிக்கை.

advertisement by google

வாஷிங்டன்: கொரோனா வைரசும் ஹெச்ஐவி பாசிட்டிவ் (எய்ட்ஸ்) மாதிரிதான், மொத்தமாக அழிக்க முடியாத நிலை ஏற்பட கூடும் என்று, உலக சுகாதார அமைப்பு (WHO) பகீர் கருத்தை தெரிவித்துள்ளது.

advertisement by google

WHO சுகாதார அவசரகால திட்டத்தின் இயக்குனர் மைக்கேல் ரியான் இந்த தகவலை தெரிவித்தார். கொரோனா வைரஸ் சமூகத்தில் தொடர்ந்து இருக்க கூடிய, மற்றொரு வைரஸாக மாறக்கூடும், ஒருபோதும் முற்றிலுமாக அழிக்க முடியாமலும் போகக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி ஒருபோதும் நீங்காதது போல, கொரோனா வைரஸ் எப்போது மறையும் என்பதற்கும் எந்த ஒரு நம்பிக்கையும் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

advertisement by google

எச்ஐவி
இதுகுறித்து மைக்கேல் மேலும் கூறியதாவது: எச்.ஐ.வி ஒருபோதும் ஒழித்துக்கட்டப்படவில்லை. ஆனால் எச்.ஐ.வி உள்ளவர்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடித்துள்ளோம். நாம் யதார்த்த நிலையை உணர வேண்டும். கொரோனா நோய் எப்போது மறையும் என்று நமக்கு தெரியாது. முடிந்தால் உலகில் உள்ள அனைவருக்கும் விநியோகிக்கக்கூடிய மிகவும் பயனுள்ள தடுப்பூசியைக் கண்டுபிடிக்கலாம். அது மட்டுமே தீர்வு.

advertisement by google

கணிப்பு
முதன்முறையாக மனித மக்களிடையே ஒரு புதிய வைரஸ் நுழைகிறது என்றால் நாம் எப்போது அதை வெல்வோம் என்று கணிப்பது மிகவும் கடினம்.

advertisement by google

கொரோனா வைரஸ் நெருக்கடி தொடங்கியதிலிருந்து மனிதகுலத்தின் பாதி பேருக்கும் மேல் ஏதேனும் ஒரு வகையான லாக்டவுனில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

advertisement by google

லாக்டவுன் தேவை
இந்த நிலையில், லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்துவது இரண்டாவது கொரோனா வேவ் எனப்படும் அலையை உருவாக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது என்று, ஹூ தெரிவித்துள்ளது. பல நாடுகள் லாக்டவுனிலிருந்து வெளியேற விரும்புகின்றன, என்று ஹூ தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். ஆனால் எங்கள் பரிந்துரை என்பது லாக்டவுனை தளர்த்த வேண்டாம் என்பதுதான். முடிந்தவரை அதிக எச்சரிக்கையோடு மக்கள் இருக்க வேண்டும், என்று அவர் தெரிவித்தார்.

advertisement by google

ஹூ எச்சரிக்கை
இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவின் வுஹானில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தோன்றியது, அதன் பின்னர் 4.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உலகளவில் 3,00,000 பேரைக் கொன்றுள்ளது. இந்த நிலையில், இந்த நிலைவில் லாக்டவுன் தளர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எச்ஐவி போல சமூகத்தில் கொரோனா தங்கிவிடும் என ஹூ எச்சரித்துள்ளது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவாது என்று கடந்த ஜனவரி மாதம், WHO கூறியது. ஆனால், அது தவறான கணிப்பு என தெரிந்தது. இதனால்தான் ஏகப்பட்ட விமர்சனங்களை அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது ஹூ. இதேபோலத்தான், கொரோனா மனித சமூகத்தில் தங்கிவிடும் என ஹூ கூறியதும் பொய்யாக மாற வேண்டும் என மக்கள் வேண்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button