கோவில்பட்டியிலிருந்து கயத்தாறுக்கு அருகே ஆத்திகுளம் கிராமத்திற்கு மும்பையிலிருந்து வந்த கணவன் மனைவி இருவருக்கு கொரோனா தொற்று உறுதி?முழு விவரம் – விண்மீன் நியூஸ்


கோவில்பட்டி அருகே மும்பையிலிருந்து வந்த கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி
கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் இருவர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கபடும் என்பதால் பல்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு வருகின்றனர். கயத்தாறு அருகே ஆத்திகுளத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 பேர் உரிய அனுமதி பெற்று தங்களது சொந்த காரில் கடந்த 8-ம் தேதி மும்பையிலிருந்து கிளம்பி 10-ம் தேதி ஆத்திகுளம் வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வருவாய் துறை, சுகாதாரத் துறையினர் அவர்களை தனிமை படுத்தி வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டினர்.மேலும் அவர்களுக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களில் 58 வயதுடைய கணவர்க்கும், 53 வயதுடைய மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உடனே வருவாய் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா தலைமையில் மருத்துவ அலுவலர் திலகவதி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் பெரியசாமி மற்றும் தாசில்தார் பாஸ்கரன், துணை தாசில்தார் திரவியம், வருவாய் ஆய்வாளர் காசிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை சிகிச்சைக்காக 108 மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆத்திகுளம் கிராமத்தில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து , உதவி ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் போலீசார் தெருக்களில் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.