இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

மும்பை சிறையில் 72 கைதிகளுக்கு கொரோனா? எவ்வளவு பாதுகாத்தும் முடியல?அதனால் போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

எவ்வளவு பாதுகாத்தும் முடியலை.. மும்பை சிறையில் 72 கைதிகளுக்கு கொரோனா.. போலீசாருக்கும் பாதிப்பு.

advertisement by google

மும்பை: மும்பையின் ஆர்தர் சாலை சிறையில் 72 கைதிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாழக்கிழமை இதை உறுதிப்படுத்தினார். இந்த கைதிகள் தனித்தனியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஆர்தர் சாலை சிறை உட்பட மாநிலத்தில் உள்ள எட்டு சிறைச்சாலைகளை மாநில அரசு தனிமைப்படுத்தியது, புதிய நபர்களை உள்ளே நுழைய அனுமதிக்காது என்றும், சிறை ஊழியர்கள் உட்பட உள்ளே இருப்பவர்கள் சிறை வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்றும் உத்தரவிட்டப்பட்டது.

advertisement by google

ஆனால் முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஆர்தர் சாலை சிறைச்சாலையின் 72 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால், பாதிக்கப்பட்ட சமையல்காரர் காரணமாக, சிறை கைதிகளுக்கு, நோய் பரவல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

advertisement by google

சிறைகளில் வைரஸ் பரவுவதைத் தடுக்க, ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை அனுபவித்த 5,000 கைதிகளை பரோலில் விடுவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றும் அனில் தேஷ்முக் கூறினார். சிறையிலுள்ள 26 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழகம் செய்யும் சூப்பர் விஷயம்.. இனி நல்ல காலம்தான்.. மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி தகவல்
இன்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 1,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button