இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உலக புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டு கடை அதிபருக்கு ,கொரோனா தாக்கியதால் மன உளைச்சல்?.. இருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பெரும் பயம்.. கொரோனா தாக்கியதால் மன உளைச்சல்.. இருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை

advertisement by google

நெல்லை: கொரோனா இருப்பது தெரிந்ததும் அதை ஜீரணிக்கவே முடியாத வேதனையிலும், கடுமையான மன அழுத்தத்திலும், தூக்கு போட்டு தொங்கிவிட்டார் இருட்டுக்கடை அல்வா ஓனர் ஹரிசிங்.. நெல்லை மக்கள் இந்த அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

advertisement by google

தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா… ஏன், உலக புகழ்பெற்றது என்றுகூட சொல்லலாம்.. நெல்லையப்பர் கோயில் எதிரே 1900-ம் ஆண்டு இந்த கடை தொடங்கப்பட்டது.. கிருஷ்ணசிங் என்பவர்தான் இந்த லாலா கடையை தொடங்கினார்.
தினமும் சாயங்காலம் 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த கடையில் பல்பு எரியும்.. அந்த பல்பு 40 வாட்ஸ் என்பதால், வெளிச்சம் குறைவாக இருக்கும்.. அதனால்தான் இருட்டுக்கடை அல்வா என்று பெயர் வந்தது. நெல்லையில் வழக்கமாகவே அல்வா ஃபேமஸ்.. இதில் இந்த கடை என்றால் கூடுதல் ஃபேமஸ்.. தற்போது இந்த கடையின் ஓனர் பெயர் ஹரிசிங்.. இவருக்கு சிறுநீரகத்தில் தொற்று இருந்தது.. அதனால் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

advertisement by google

இந்த சமயத்தில்தான், அவரது கொரோனா தொற்று ஏற்பட்டது.. தொற்று இருப்பது தெரிந்ததுமே உடனடியாக டெஸ்ட் செய்தனர்.. அப்போது அவரது மருமகனுக்கும் டெஸ்ட் செய்தனர்.. இதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.. பிறகு, உடனடியாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார் ஹரிசிங்.

advertisement by google

ஆனால் தனக்கு கொரோனா இருப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து கொண்டிருந்தார்.. இந்நிலையில்தான் தற்போது, ஹரிசிங் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் நெல்லை மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. . இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கடையில் உள்ளவர்களுக்கும் தொற்று இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளதால், அதற்கான பரிசோதனைகள் முடுக்கவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே தொற்று உறுதியான மருமகனுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button