இந்தியாஇன்றைய சிந்தனைகல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்

2020-2021 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்கலாம் – யூஜிசி அதிரடி அறிப்பு?முழு – விண்மீன்நியூஸ்

advertisement by google

2020-21 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்கலாம்.. யுஜிசி அதிரடி அறிவிப்பு!

advertisement by google

டெல்லி: நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலை 1 முதல் 31 வரை நடத்தலாம், வகுப்புகளை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கலாம் என யூஜிசி அறிவுறுத்தி உள்ளது.

advertisement by google

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட லாக் டவுன் மொத்தமாக மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அதற்கு முன்பே மார்ச் 16ம் தேதியே மூடப்பட்டது.

advertisement by google

இந்த நிலையில் லாக் டவுன் காரணமாக இன்னும் கல்வி நிறுவனங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்த பல்கலைக்கழகம் மானிய குழு இரண்டு ஆய்வு குழுக்களை உருவாக்கி இருந்தது. இந்த ஆய்வு குழு தனது பரிந்துரையை கடந்த வாரம் யுஜிசிக்கு செய்து இருந்தது.
இந்த குழுவின் பரிந்துரையில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கலாம் என்று பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு குறிப்பிட்டு இருந்தது.

advertisement by google

இந்த நிலையில் பல்கலைக்கழக மானிய குழு இது தொடர்பாக முடிவு செய்துள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலை 1 முதல் 31 வரை நடத்தலாம் என யூஜிசி அறிவுறுத்தி உள்ளது. மேலும் நாடெங்கிலும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்கையை மேற்கொள்ளலாம். தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் தொடங்க வேண்டும், புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் மாதம் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல் இடைநிலை மாணவர்களுக்கு கடந்த இரண்டு செமஸ்டர்களில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இன்டெர்னல் மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் சூழ்நிலை சரியாக இருந்தால் தேர்வுகளை ஜூலை மாதமே நடத்திக் கொள்ளலாம்.
வாரத்துக்கு 6 நாட்கள் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதேபோல் மாணவர்கள், ஆசிரியர்களின் டிராவல் ஹிஸ்டரியை கல்வி நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆய்வு படிப்புகளுக்கான தேர்வுகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலமும், இணையம் மூலமும் நடத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களை வகுத்து முடிவுகளை எடுக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button