இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்திபயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்

இஸ்மாயில் ஷா தர்காவின் இஸ்லாமிய திருவிழாவை காலங்காலமாக நடத்தும் இந்துக்கள்? ஆபூர்வ தமிழ் பண்பாட்டு விஜயநாராயணம்?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

“தமிழ் எனும் பண்பாட்டு”

advertisement by google

இந்த உலகில் பல நம்பிக்கைகள் உள்ளன. அதற்கென தனி அடையாளங்களும், பழக்கவழக்கங்களும் உண்டு. ஆனால் அப்பழக்கவழக்கங்களில் ஊடுருவி உள்ள பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் அந்தந்த மக்களின் மொழி மற்றும் சார்ந்தவைகளோடு உறவு கொண்டிருக்கும்.

advertisement by google

அவ்வாறு தமிழர்கள் தன் மரபுவழி பழக்கமான அவைதீக மரபாக இருக்கட்டும் அல்லது பிற அந்நிய நம்பிக்கையாக இருக்கட்டும் தங்களின் பண்பாட்டு விழுமியங்களூடே அதனை அனுகினார்கள்.

advertisement by google

சான்றாக, 7 கள்வர்களிடமிருந்து பிராமணப் பெண்ணொருத்தியை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த பக்கிரி சாய்புவின் தர்கா தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மேற்குப் பகுதியில் உள்ளது. தன்னை காப்பாற்ற முயன்று உயிர் இழந்த பக்கிரிசாய்புவை கண்டு மனம் வருந்தி தன் நாக்கைப்பிடுங்கி கொண்டு உயிர்துறக்கிறாள் அந்த பிராமணப்பெண். அவரும் அத்தர்காவிலே அடக்கம் செய்யப்படுகிறார். “இஸ்மாயில் ஷா தர்கா” என்றழைக்கப்படும் இத்தர்காவில் இசுலாமியர்களும் இந்துக்களும் இனணந்து வழிபடுகிறார்கள்.

advertisement by google

உலகிற்கே வழிகாட்டியாக திருநெல்வேலி மாவட்டத்தின் நான்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாராயணம் என்ற கிராம் திகழ்கிறது. இக்கிராமத்தில் இசுலாமியர்கள் இல்லை. எனினும் வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் “செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை அப்பா தர்காவில் (சமாதி)” ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16-ஆம் தேதி ஒன்றுகூடி கந்தூரி எனும் விழாவை நடத்துகின்றனர். கந்துாரி விழாவில் கலந்து கொள்ளும் இசுலாமியாகள் அக்கிராமத்து வீடுகளிலேயே ஏழைப் பணக்காரன் என்ற எந்த பாகுபாடுமின்றி தங்குகின்றனர். அதோடு இந்த விழாவை அக்கிராமத்து இந்துக்களே முன்னின்று நடந்துகின்றனர்.

advertisement by google

தமிழ்நாட்டில் இது போன்று பல தர்காக்கள் பேதமின்றி செயல்படுகின்றன.

advertisement by google

காணிக்கை நேர்தல், காணிக்கை வழங்குதல், அவுலியாவின் சமாதியை வலம் வருதல், புனித நீர் வழங்குதல், தலைமுடி எடுத்தல், சந்தனக்கூடு ஊர்வலம் மேலும் ‘கொடிகட்டு’ ஊர்வலம் போன்றவை கோயில் திருவிழாக்களின் போது நடைபெறும் சப்பர ஊர்வலத்தையும், தேரோட்டத்தையும் நினைவூட்டுகிறது.

advertisement by google

இதனடிப்படையில் தமிழர்கள் தன் மண் மற்றும் பண்பாடு விழுமியங்கள் சார்ந்தே எந்த ஒரு நம்பிக்கையையும் அணுகுகிறார்கள். அந்நிய நம்பிக்கைகளாக இருந்தாலும் அவைகளை தமிழ் பண்பாடு கலாச்சாரத்திற்கு உகந்தவாறு மாற்றியமைத்து பின்பற்றி வருகின்றனர்.
ஏனெனில், “தமிழ் பண்பாடு” என்பதே அனைவரையும் தமிழர்களாய் ஒன்றிணைக்கிறது!✍??

advertisement by google

Related Articles

Back to top button