இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

கோவையில் ஒரு ருபாய்க்கு இட்லிவிற்கும் கமலதாள் பாட்டியிடம் வீடியோ காலில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்?

advertisement by google

advertisement by google

advertisement by google

என்ன வயசு உங்களுக்கு, உடம்ப பார்த்துக்கோங்க என கோவை இட்லி பாட்டி கமலாத்தாளிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ காலில் பேசினார்.

advertisement by google

ஒரு ரூபாய் இட்லி என்றாள் நம் கண்முன்னே வந்து செல்பவர் கமலாத்தாள் பாட்டி .

advertisement by google

இட்லி பாட்டி என்றாலே தமிழகம் மட்டுமல்ல தேசம் முழுவதுமுள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எவ்வளவு புகழ் வந்தாலும் யதார்த்தமாக நம்மை பார்த்து கை அசைத்து ஒரு குழந்தையை போல துள்ளி குதித்து வந்த பாட்டியை நம்மாலும் மறக்க முடியாது.

advertisement by google

கொரொனா எதிரொலி காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி.

advertisement by google

வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகிறார். ரூ100-க்கு விற்ற உளுந்து தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு ரூபாய்க்கு இட்லிரூ 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட மிளகாய் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனினும் புன்னகை மாறாமல், எப்படியாவது சமாளித்து ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்து வருகிறார்.

advertisement by google

தன்னை தேடி பல பேர் வந்து அரிசி , பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

மெய்சிலிர்க்க வைக்கிறதுமற்றவர்கள் செய்யும் உதவியை தான் மறக்க மாட்டேன் என தெரிவித்தார். 85 வயதானாலும் சுறுசுறுப்புக்கு உதாரணம் இட்லி பாட்டிதான் என்னுமளவுக்கு நமக்கும் உற்சாகத்தை கொடுக்கும், மனிதநேயமுள்ள அவரது அன்பு , அவரிடம் வருகின்ற அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கமலாத்தாள்நாம் இட்லி பாட்டி வீட்டிற்குள் செல்லும் போது செல்போனில் வீடியோ காலில் இருந்தார் இட்லி பாட்டி . யார் என்ற ஆவலில் அருகே சென்று பார்த்த போது, மறுமுனையில் இருந்தவர், என்ன வயசு உங்களுக்கு என இட்லி பாட்டியிடம் அவர் கேட்டதும், 85 என உடனே பதில் சொன்னார்.

மேலும் கமலாத்தாள் தானே உங்க பேரு என கேட்டதற்கு ஆம் என்று பதில் சொன்னார்.ஸ்டாலின்உங்க கூட யார் இருக்காங்க என கேட்ட போது தனது மகன் மற்றும் பேரனுடன் இருப்பதாக பாட்டி பதிலளித்தார்.

உதவி என்ன வேணும் என கேட்டதற்கு , கேஸ்க்கு பணமும், அரிசி பருப்பும் கொடுத்தாங்க என சொன்ன பாட்டியிடம் உடலை நன்றாக பார்த்துக் கொள்ள சொன்னார் எதிர்முனையில் பேசியவர், வேறு யாருமல்ல திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின்.

உதவி செய்ய தயார்மு க ஸ்டாலினிடம் பேசிவிட்டு வந்த பாட்டிக்காக நாம் வெளியே காத்திருந்த போது, ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் பாட்டிக்கு அரிசி ,பருப்பு ,எண்ணெய், காய்கறிகளை வழங்கினார்.

என்ன என்று கூட பார்க்காமல் நம்மையும் வீட்டிற்குள் அழைத்துச்சென்றார் இட்லி பாட்டி. பிரசாத் உத்தமன் பாட்டிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.மளிகை பொருட்கள்இதனையடுத்து நம்மிடம் பிரசாத் உத்தமன் பேசும்போது இட்லி பாட்டியை பற்றி படித்தும் , கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் 85 வயதிலும் அன்னதானம் செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். கொரொனா எதிரொலியால் மளிகை பொருட்களின் விலையேற்றம் வந்தாலும் சமாளித்து 400 பேருக்கு உணவளித்து வருவது பாராட்டத்தக்கது என்றார். அவருக்கு தங்கள் நிறுவனத்தின் மூலம் அரிசி, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி இருப்பதாகவும், தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

advertisement by google

Related Articles

Back to top button