இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முக கவசம் அணியாததால், அபராதம் செலுத்தக்கூறிய போலீசாரிடம் ‘நானும் ரவுடிதான்’ என ரகளை செய்த இளம்பெண் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

முக கவசம் அணியாததால், அபராதம் செலுத்தக்கூறிய போலீசாரிடம் ‘நானும் ரவுடிதான்’ என ரகளை செய்த இளம்பெண் கைது*

advertisement by google

தஞ்சாவூர்,

advertisement by google

தஞ்சை புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்போது ஸ்கூட்டரில் பெண் ஒருவர், முக கவசம் அணியாமல் வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, முக கவசம் அணியாததால் அபராதம் ரூ.200 செலுத்துமாறு கூறினர்.

advertisement by google

அப்போது அந்த பெண், போலீசாரை பார்த்து, எல்லோரும் உழைக்கிறவங்கதான். இத்துனூண்டு மாஸ்கிற்கு (முக கவசம்) ரூ.200 கட்ட சொல்றீங்களே, அசிங்கமா இல்லையா? என கேட்டார். உடனே போலீசார், கலெக்டரை போய் கேளும்மா என கூற அந்த பெண், கலெக்டரை கூட்டிட்டு வா… என தகாத வார்த்தையில் பேசி ரகளை செய்தார்.

advertisement by google

இதை எல்லாம் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்த போலீஸ்காரரை பார்த்து அந்த பெண், வீடியோ எடுக்கிறியா எடுத்துக்கோ. பேஸ்புக்கில் போடுறியா போடு. ஷேர் செய்வோமா? எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் நான் மாஸ்க்கை உள்ளே வைத்து இருக்கிறேன். என்னை உள்ளே போட போறியா… போடு. நானும் ரவுடி தான். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என கூறிவிட்டு அங்கிருந்து அந்த பெண் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். போலீஸ் விசாரணையில், அந்த பெண் தஞ்சை மானோஜிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நந்தினி (வயது26) என்பது தெரிய வந்தது. அவர் மீது பொது இடங்களில் ஆபாசமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button