இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஹெச்.ராஜாவிடம் இந்த நம்பரை சொன்னா அவ்வளவுதான் ரகசியம் உடைத்த கார்த்தி சிதம்பரம்?

advertisement by google

♦ஹெச்.ராஜாவிடம் இந்த நம்பரை சொன்னா அவ்வளவுதான்: ரகசியம் உடைத்த கார்த்தி சிதம்பரம்

advertisement by google

?பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம் இந்த நம்பரை சொல்லுங்கள் அது போதும் என சிவகங்கை எம்.பி. தெரிவித்துள்ளார்.

advertisement by google

?குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது.

advertisement by google

?ஆனால், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாலும், பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவதாலும் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

advertisement by google

?இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.

advertisement by google

?யூதர்களின் உரிமைகளைப் படிப்படியாக ஹிட்லர் பறித்ததை போல இஸ்லாமியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகின்றனர்.

advertisement by google

?அடுத்தகட்டமாக, ஹிட்லரை போல வதை முகாமிற்கு இஸ்லாமியர்களை அனுப்பி சித்ரவதை செய்த திட்டமிட்டுள்ளனர் என்றார்.

advertisement by google

?ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் குடியுரிமை சட்ட திருத்தத்தை நிச்சயமாக ஆதரித்து இருக்க மாட்டார் என தெரிவித்த கார்த்தி சிதம்பரம், எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா வழியிலிருந்து அதிமுக விலகிச் செல்கிறது.

?பாஜகவின் கைக்கூலிகளாக அதிமுக உள்ளிட்ட சில மாநில கட்சிகள் மாறிவிட்டன எனவும் குற்றம் சாட்டினார்.காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தான் வலிமையான தலைவர். அவர் தலைவராக தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அவர் கட்சியை மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளையும் சிறப்பாக வழி நடத்துகிறார்.

?இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு காங்கிரஸ் காரணமல்ல. ராஜபக்‌ச – புலிகள் இடையே நடந்த போரினால் தான் மக்கள் கொல்லப்பட்டனர்.

?அப்பாவி இலங்கை தமிழர்களை காங்கிரஸ் கொல்ல சொல்லவில்லை என கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

?ப.சிதம்பரத்தை தொடர்ச்சியாக விமர்சித்து வருவது குறித்து கார்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “நான் அவருக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால் அவரிடம், 332244 என்று மட்டும் சொல்லுங்கள்” என்றார்.

?இது என்னடா புதுசா ஏதோ நம்பரை சொல்கிறாரே என யாரும் குழம்ப வேண்டாம். சிவகங்கை எம்.பி.தேர்தலில் ஹெச்.ராஜாவை விட கூடுதலாக பெற்ற ஓட்டுகளைத்தான் கார்த்தி அவ்வாறு கூறிச்சென்றுள்ளார்.

advertisement by google

Related Articles

Back to top button