தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நெல்லைதம்பதிகளிடம் செருப்படி துடைப்பத்தில் அடிவாங்கி ஓடிய கொள்ளையர்கள் வாக்குமூலம் ,?சிரிப்புதிகில்?

advertisement by google

advertisement by google

இல்லீங்க.. அந்தம்மா கழுத்தில அவ்ளோ நகை இருந்துச்சு.. அந்த வயசானவங்களை கொலை செய்ய எங்களுக்கு மனசே வரல.. கேஸ் செலவுக்கு பணம் தேவைப்பட்டது.. அதுக்காக கொள்ளை அடிக்க மட்டும்தான் வந்தோம்” என்று நெல்லை தம்பதியினரிடம் செருப்பு, துடைப்பத்தில் அடி வாங்கி கொண்டு ஓடிய 2 கொள்ளையர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்

advertisement by google

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த வயதான தம்பதி சண்முகவேல் – செந்தாமரை. கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இவர்கள் இருவரும் தங்கள் பண்ணை வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் அரிவாளுடன் திருட வந்துவிட்டனர். ஆனால் தம்பதி இருவரும் பயப்படவே இல்லையே… துணிச்சலுடன் கையில் கிடைத்த செருப்பு, சேர்களை எடுத்து அந்த கொள்ளையர்கள் மீது வீசியதில், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த துணிச்சல் மிகுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகி வைரலானது. இந்த தைரியத்தை பாராட்டி நம் முதல்வரும் இவர்களுக்கு விருது வழங்கினார்.கால் கலரை பாருங்க.. செருப்பை பாருங்க.. இவனுக வட நாடு கிடையாது.. நம்மாளுங்கதான்.. செம துப்பு!2 பேர் கைதுஆனால், கொள்ளையடிக்க வந்தவர்கள் யார் என்று தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். இதற்காகவே 7 தனிப்படையும் அமைக்கப்பட்டது. இப்போது, இந்த விவகாரம் நடந்து 50 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இந்த கொள்ளையில் தொடர்புடைய அவர்கள் பெயர் பாலமுருகன் 30, பெருமாள் 54, ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஜாமீன்அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “நாங்க 2 பேரும் நண்பர்கள். ஜெயிலில்தான் நாங்க ஃப்ரண்ட் ஆனோம். எங்க மேல நிறைய கேஸ் நிலுவையில் இருக்கு. ஜாமீனில் வந்துவிட்டோம், ஆனால், செலவுக்கு பணம் இல்லை.. கேஸ் நடத்தவும் கையில் காசு இல்லை.. இதுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்தோம். அப்பதான் செந்தாமரை அம்மாள் கழுத்து நிறைய நகையை போட்டுட்டு கோயிலுக்கு போனாங்க.துப்பாக்கிஅதனால் அவங்க வீட்ல கொள்ளை அடிக்கலாம், நகை நிறைய கிடைக்கும்னு முடிவு பண்ணோம், ஆகஸ்ட், 9, 10ம் தேதிகளில் அந்த வீட்டை நோட்டம் பார்த்தோம். சிசிடிவி கேமிராக்கள் வெச்சிருந்தாங்க. அங்கிருந்த ஒரு மோட்டர் ரூமில் அரிவாள், துப்பாக்கி இருந்தது… அதை எடுத்து கையில் வெச்சிக்கிட்டோம். முகமூடியும் போட்டுக்கிட்டுதான் மறுநாள் உள்ளே போனோம்.அடித்து தாக்கினார்வெளியில் உட்கார்ந்திருந்த சண்முகவேல் கழுத்தில் துண்டால் இறுக்கி கீழே தள்ளினோம். ஆனால் அவர் எங்களை அடிப்பார்ன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. எங்க கையில அரிவாள் இருந்தது.. ஆனாலும் அவரை கொல்ல எங்களுக்கு மனசு வரலை. எங்க நோக்கம் நகை மட்டும்தான்.நகை கொள்ளைஒரு கட்டத்தில் முடியாததால் அந்தம்மா கழுத்தில் கிடந்த நகையை மட்டும் பறிச்சிட்டு தப்பி ஓடினோம். ஓடும்போது, ராத்திரி 11 ஆயிடுச்சு. அந்த சமயம் புலவனூரில் ஒரு சர்ச்சில் திருவிழா முடிச்சிட்டு நிறைய பேர் வீட்டுக்கு போய்ட்டு இருந்தாங்க. அதில வள்ளி என்ற பெண்ணிடம் 35 கிராம் நகையை போற போக்கில் அபேஸ் பண்ணிட்டு ஓடிவிட்டோம். கொள்ளை அடிச்சி இவ்ளோ நாள் ஆயிடுச்சே.. எங்களை யாரும் பிடிக்க மாட்டாங்கன்னு நினைச்சு அசால்ட்டா இருந்துட்டோம்” என்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button