மருத்துவம்விவசாயம்

பப்பாளி இலை சாற்றின் மருத்துவ நன்மைகள்?

advertisement by google

?பப்பாளி இலை சாற்றின் மருத்துவ நன்மைகள்…!!?

advertisement by google

பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது எளிதாக உடையக் கூடியது.பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தான் தொகுப்பாக இருக்கும். அதனால் தான் நம் ஆரோக்கியத்தையும் உயரத்தில் வைக்க உதவியாய் இருக்கிறது.

advertisement by google

டெங்கு காய்ச்சலுக்கு இப்போது வரை தனி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆன்டிவைரஸ் மருந்துகள் கூட இல்லை. பிளேட்டுலெட்டுகள் வெகுவாக குறைவதாலேயே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க செய்வது மிக அவசியம் அதற்கு சிறந்த தீர்வு பப்பாளி இலைச்சாறு என்று ஆய்வில் கூறப்படுகிறது

advertisement by google

பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளதால் இதன் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் அந்த நோய் பாதிப்பை குறைக்கலாம்.

advertisement by google

பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.

advertisement by google

பப்பாளி இலையை நன்கு சுத்தமான நீரில் அலசி, பின் அதனை கைகளால் கசக்கி, சாற்றை எடுக்க வேண்டும். ஒரு பப்பாளி இலையில் இருந்து ஒரு டேபிள் ஸ்பூன் சாறு கிடைக்கும். இந்த முறையின் மூலம் பப்பாளி இலை சாறு எடுக்கவேண்டும்.

advertisement by google

காய்ச்சல் போன்ற நோய் ஏற்பட்ட காலங்களில் இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் சாப்பிடவேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருகவேண்டும். இது பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வெள்ளை அணுக்களையும் அதிகரிக்கும்.

advertisement by google

தினமும் நாம் பப்பாளி இலைச் சாற்றினை சிறிய அளவில் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.

வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை , அலர்ஜி போன்ற சரும பிரச்சனை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். இந்த எண்ணையை

கட்டி மேல் தடவினால் கட்டி உடையும். வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். காயம் பட்ட இடத்தில் பூசினால் காயங்களுக்கு விரைந்து குணம் கிடைக்கும்

படர் தாமரை என்று உடல் இடுக்குகளில் ஏற்படும் தோல் பிரச்னைக்கும் பப்பாளி இலையை அரைத்து பூசினால் நல்ல குணம் கிடைக்கும்.

advertisement by google

Related Articles

Back to top button