கோவில்பட்டியில் கூடுதலாக கிருமிநாசினி சுரங்கபாதை அமைக்க த.மா.க நகர தலைவர் ராஜகோபால் கோரிக்கை?
கோவில்பட்டி நகரில் கூடுதலாக கிருமி நாசினி தெளிப்பு சுரங்கபாதை அமைக்க த.மா.க கோரிக்கை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கபாதை அமைக்கப்பட்டு நேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீவிடம், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் கோரிக்கை மனு வழ்ஙகினர். மனுவில் வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பு சுரங்கபாதை ஏ.வி.மேல்நிலைப்பள்ளி மற்றும் கூடுதல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட் பகுதியிலும் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.