பயனுள்ள தகவல்வரலாறு

பெர்முடா ஒரு முக்கோணத்திற்கும்? கதைக்குமுள்ள தொடர்பு?

advertisement by google

பெர்முடா

advertisement by google

ரமணா படத்துக்கு ஏன் விஜய்காந்தை தேர்ந்தெடுத்தீங்கங்க ன்னு முருகதாசைக் கேட்டப்ப “கிளைமாக்ஸ்ல எல்லா ஸ்டூடன்ட்ஸயும் பாத்து மெசேஜ் சொல்ற மாதிரி ஒரு சீன், அதைச் சொல்ல சில நடிகர்களுக்கு மட்டும் தான் மாஸ் இருக்கு, கேப்டன் அதுல முக்கியமானவர். அந்த சீனுக்காகத் தான் அவரை முடிவு பண்ணேன்” னு சொல்லிருப்பார்.

advertisement by google

ஒரு வசனத்தை யார் சொன்னா நல்லாருக்கும்ங்கற மாதிரி தான், சில கதைகளையும் சிலர் சொன்னா தான் நல்லாருக்கும். சிலரால மட்டும் தான் அந்த கதைகளை சொல்லவே முடியும்.

advertisement by google

பெர்முடா முக்கோணத்தைப் பத்தி கேள்விப்பட்டுருப்போம். பக்கத்துல போன எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்துரும். காரணமே புரியாமக் காணாம போனவங்க அதிகம். அதே மாதிரி ஆம்பளைங்க தொலைஞ்சு போற இன்னொரு முக்கோணம் இருக்கு. அதுக்கும் பெர்முடாவுக்கும் கூட சம்பந்தமிருக்கு.

advertisement by google

சரி கதைக்கு வருவோம். களம்னு பார்த்தா பொருந்தாக் காமம்.

advertisement by google

அறுபது வயசு வரைக்கும் பொண்டாட்டி தமயந்தி பேச்சைத் தட்டாம காதலையோ காமத்தையோ வகையா அனுபவிக்காத சாம்பசிவராவ் வாழ்க்கைல எதிர்பாராதவிதமாக அவர் இத்தனை நாள் தவற விட்டதெல்லாம் கிடைக்க ஆரம்பிக்குது

advertisement by google

பொண்டாட்டிக்கு உடம்பு சரியல்லாம இருக்கற சூழ்நிலைல தன்னோட நீட் கோச்சிங் செண்டர்ல படிக்க வர திவ்யா கூட அம்பது வயசு ராமசுப்புக்கு தொடர்பு ஏற்படுது

advertisement by google

தமிழ் சினிமால உச்சத்துல இருக்க இயக்குனர் சுரேஷ்வர்க்கு அறிவும் திறமையும் இருக்க நித்யாங்கற இளமையான பொண்ணோட நட்பு கிடைக்குது.

இந்த மூணு கதைகள்லயும் பொதுவான விசயம்னா ஆணுக்கு வயசு அதிகம். பெண்ணுக்கு பாதிக்கும் கீழ. அவங்க மூணு பேர் வாழ்க்கைலயும் பெண்கள் வராங்கங்கற மாதிரி தோணும். ஆனா பெண்களாத் தான் விரும்பி அதை செயல்படுத்துவாங்க.

ஆம்பளைங்கறவன் வெறும் அட்டைக் கத்தி தான். அவன் என்ன செய்யணும்னு முடிவு பண்றது ஏதோ ஒரே விதத்தில் ஒரு பெண்ணா தான் இருக்க முடியும். அதிகமாக அதுல காமம் பெரும் பங்கு வகிக்கும்.

நிஜமா Cable Sankarக்கு எங்கே இருந்து இந்த மாதிரி கதைகள் கிடைக்குது? உண்மையிலேயே பார்ல உக்காந்து இத்தனையும் சொல்லுவாங்களா? இந்த மாதிரி மெடிக்கல் சீட்டுக்காக இல்லை இன்ஜினியரிங் சீட்டுக்காகத் தன்னைக் கொடுத்த பெண்ணை பாத்துருக்கேங்கறதால எனக்கு இது யதார்த்தமா தான் பட்டுச்சு.

வழக்கம் போல சுரேஷ்வர்-நித்யா போர்ஷன் செம. அது மாதிரி ராயலா கொஞ்ச நாளாவது அனுபவிச்சுடணும்.

என்ன சொல்ல? சங்கரோட கதைகளைப் படிக்க கொஞ்சமாவது நடப்புலகத்துல இருக்கணும், இல்லைன்னா இப்படில்லாம் எங்காவது நடக்குமான்னு தான் கேள்வியெழும்.

பொண்டாட்டி நாவலை எப்படி எல்லாப் பெண்களும் படிக்கனும்னு சொல்றனோ அது மாதிரி பெர்முடா நாவலை எல்லா ஆண்களும் கட்டாயம் படிக்கணும்.

advertisement by google

Related Articles

Back to top button